ரம்யா பாண்டியன், வி.ஜே மணிமேகலை... பிக்பாஸ் 4 பட்டியல் லீக்?
பிக் பாஸ் சீசன் 4 இன்னும் சில மாதங்களில் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், பிக்பாஸ் சீசன் 4 இல் ரம்யா பாண்டியன், விஜே மணிமேகலை ஆகியோர் இடம் பெற உள்ளதாக போட்டியாளர்களின் பட்டியல் கசிந்துள்ளதாக கூறப்படுகிறது.
பிக் பாஸ் சீசன் 4 இன்னும் சில மாதங்களில் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், பிக்பாஸ் சீசன் 4 இல் ரம்யா பாண்டியன், விஜே மணிமேகலை ஆகியோர் இடம் பெற உள்ளதாக போட்டியாளர்களின் பட்டியல் கசிந்துள்ளதாக கூறப்படுகிறது.
bigg boss season 4, vijay tv, bigg boss tamil, bigg boss season 4, bigg boss season 4 hosted kamal haasan, பிக் பாஸ், பிக் பாஸ் சீசன் 4, கமல்ஹாசன், பிக் பாஸ் சீசன் 4 போட்டியாளர்கள் பட்டியல், ரம்யா பாண்டியன், விஜே மணிமேகலை, bigg boss season participatant ramya pandian, vj manimegalai, vijay tv bigg boss
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் 3 சீசன்களும் தொலைக்காட்சி பார்வையாளர்கள் இடையே பெற்ற வரவேற்பைத் தொடர்ந்து, பிக் பாஸ் சீசன் 4 இன்னும் சில மாதங்களில் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், பிக்பாஸ் சீசன் 4 இல் ரம்யா பாண்டியன், விஜே மணிமேகலை ஆகியோர் இடம் பெற உள்ளதாக போட்டியாளர்களின் பட்டியல் கசிந்துள்ளதாக கூறப்படுகிறது.
Advertisment
விஜய் டிவில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் நிகழ்ச்சியின் 3 சீசன்களுமே தொலைக்காட்சி பார்வையாளர்கள் இடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. பிக் பாஸ் 3 சீசன்களையும் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். பிக் பாஸ் சீசன் 3 கடந்த ஆண்டு நிறைவடைந்தது.
இந்த நிலையில், பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி இன்னும் சில மாதங்களில் அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான ரம்யா பாண்டியன், விஜே மணிமேகலை ஆகியோர் போட்டியாளர்களாக இடம்பெற உள்ள பட்டியலும் கசிந்துள்ளதாக கூறப்படுகிறது. இவர்களுடன், நடிகை சுனைனா, அமிர்தா, அதுல்யா ரவி, கிரண் ஆகியோரும் இடம் பெற உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த பட்டியலில் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க காத்திருப்பதாக கூறப்படுகிறது.
Advertisment
Advertisements
பிக் பாஸ் நிகழ்ச்சியின் 3 சீசன்களையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில், 4 வது சீசனை நடிகர் சிம்பு தொகுத்து வழங்க உள்ளதாக வதந்திகள் வெளியானது. ஆனால், பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க நடிகர் கமல்ஹாசன் ஆர்வமாக உள்ளதாக கூறுகின்றனர்.
வழக்கமாக பிக் பாஸ் நிகழ்ச்சி ஜூன் மாதம் தொடங்கப்படும். ஆனால், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பிக் பாஸ் சீசன் 4 ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"