அட, பிக் பாஸ் புரமோவிலேயே இவ்ளோ சண்டையா? பற்ற வைத்த கமல்ஹாசன்

பிக் பாஸ் சீசன் 5 புரமோவைப் பார்த்த ரசிகர்கள் அட பிக் பாஸ் புரமோவில்யே இவ்வளவு சண்டையா பத்த வச்சுட்டாரே உலகநாயகன் என்று வியப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

BiggBossTamil, BiggBossTamil5, BB, BiggBoss5, BiggBossSeason5, பிக் பாஸ் சீசன் 5, பிக் பாஸ் தமிழ், பிக் பாஸ் 5, விஜய் டிவி, கமல்ஹாசன், பிக் பாஸ் 5 புது புரமோ, கல்யாண வீட்டில் கலாட்டா, பிக் பாஸ் வீட்டில் கலாட்டா, BB5, BiggBoss, VijayTV, VijayTelevision, StarVijayTV, StarVijay, TamilTV, RedefiningEntertainment, BiggBoss, BiggBossTamil, KH, Kamal, KamalHaasan, UniversalHero, Eviction, Nomination

எப்போது ஆரப்பிக்கு பிக் பாஸ் சீசன் 5 என்று எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு பிக் பாஸ் 5 நிகழ்சியின் 2வது புதிய புரமோ வெளியாகி இருக்கிறது. இதில், ஒரு கல்யாண வீடில் காலையில் தொடங்கி இரவுக்குள் என்னென்ன கலாட்டா நடக்கிறது என்பதைக் காட்டி பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடக்கப்போகும் சண்டையை முன்னோட்டமாக காட்டுகிறார் கமல்ஹாசன். பிக் பாஸ் சீசன் 5 புரமோவைப் பார்த்த ரசிகர்கள் அட பிக் பாஸ் புரமோவில்யே இவ்வளவு சண்டையா பத்த வச்சுட்டாரே உலகநாயகன் என்று வியப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அடுத்த வீட்டுக்குள் என்ன நடக்கிறது என்று தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இயல்பாகவே மக்கள் மத்தியில் உள்ளதால், பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய மொழிகளில் எல்லாம் பெரும் வெற்றி பெற்றது. அந்த வகையில், விஜய் தொலைக்காட்சியில் தொடங்கப்பட்ட இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பற்று வெற்றி பெற்றதையடுத்து இதுவரை 4 சீசன்கள் நடந்து முடிந்துள்ளன.

பிக் பாஸ் நிகழ்ச்சி என்பது, சினிமா, டிவி பிரபலங்கள், இசை கலைஞர்கள், என வெவ்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களை போட்டியாளர்களாக தேர்ந்தெடுத்து அவர்களை பிக் பாஸ் வீட்டுக்குள் 100 நாட்கள் ஒன்றாக தங்கவைக்கப்படுவார்கள். அந்த 100 நாட்களும் அவர்கள் பிக் பாஸ் வீடு முழுவதும் கண்காணிப்பு கேமிராவில் படம்பிடிக்கப்பட்டு அங்கே நடக்கும் நிகழ்களை தினசரி டிவியில் ஒளிபரப்புவர்கள். அதில் டாஸ்க்குகள் விதிமுறைகளின்படி எலிமினேஷன் செய்யப்பட்டு பிக் பாஸ் வீட்டில் இருந்து போட்டியாளர்கள் வெளியேற்றப்படுவார்கள். ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் பிக் பாஸ் வீட்டுக்குள் நடந்த நிகழ்வுகள் தொகுத்து வழங்கப்படும்.

இப்படி, விஜய் டிவியில் ஒளிபரப்பான 4 சீசன்களையும் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். பிக் பாஸ் சீசன் 5 எப்போது தொடங்கப்படும் என்று காத்திருந்த ரசிகர்களுக்கு இந்த செப்டம்பர் மாதம் தொடங்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. அதோடு, பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரமோ வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. அதில், கமல்ஹாசன், ஒரு வில்லத் தனமான சிரிப்புடன் ஆரம்பிக்கலாமா என்று என்று பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் லோகோவான கண்காணிப்பு கேமிரா கண் பிங்க் நிற கண்ணை அறிமுகப்படுத்தினார். பிக் பாஸ் சீசன் 5 விரைவில் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் கலகலப்பான கல்யாண சண்டையுடன் 2வது புரமோ வெளியாகி உள்ளது. அதில், கமல்ஹாசன் ஒரு கல்யாண வீட்டில் இருக்கிறார். நாதஸ்வரம் மேள தாளத்துடன் தொடங்குகிறது. கல்யாண வீட்டில் மாப்பிள்ளையையும் பெண்ணையும் வரவேற்கிறார்கள். வாங்க மாப்பிள்ளை, வலது காலை எடுத்து வச்சு வாங்க, என்று வரவேற்கிறார்கள். அப்பொது காலை 6 மணி என்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் காலை 6 மணிக்கு என்ன நடந்தது என்பது போல வாய்ஸ் ஒவர் வருகிறது. கமல்ஹாசனும் கல்யாண வீட்டுக்குள் நுழைகிறார்.

கல்யாண வீட்டில், இதைப்போல ஒரு குடும்பம் இங்கில்லை. அன்பாக வாழ்ந்தாலே வரும் சொர்க்கம் மண்மேலே, விதவிதமா பாராட்ட ஒன்னு வரல என்று பாடல் ஒளிக்கிறது. மாப்பிள்ளையை விழுந்து விழுந்து கவனிக்கிறார்கள். கல்யாண வீட்டில் மதியம் 12 மணிக்கு எல்லோரும் சேர்ந்து செல்ஃபி எடுத்துக்கொள்கிறார்கள்.

இதையடுத்து, மதியம் பொண்ணு வீட்டில், மாப்பிள்ளை அரவிந்த்சாமி மாதிரி இருப்பார்கள் என்று சொன்னார்கள். அரைசாமிகூட இல்லை என்று கிண்டல் செய்கிறார்கள். இதைக்கேட்டு மாப்பிள்ளையின் அம்மா கோபடமடைகிறார்.

மதியம் 2 மணிக்கு கமல்ஹாசன் வத்திக்குச்சியை பற்ற வைக்கிறார். பந்தியில் மாப்பிள்ளையின் அம்மா, இது சாம்பாரா, நான்கூட ரசம்னு நினைச்சுட்டேன் என்று சொல்லி சிரித்து, பதிலுக்கு பெண் வீட்டாரை கிண்டல் செய்கிறார்.

அப்போது மச்சினிச்சி, மாப்பிள்ளையிடம் காபி பிடிச்சுருக்குதா மாமா என்று கேட்க, அதற்கு மாப்பிள்ளையின் அம்மா, ஃபர்ஸ்ட் அவளுக்கு உன்னதாம்மா புடிச்சது என்று கூறி குண்டை தூக்கிப் போட்டு ரகளை செய்கிறார். மாமியார் எங்க தலை எழுத்து என்று கூற… மாப்பிள்ளை அய்யோ ஏன் தலையை ஏன் உருட்டுறீங்க என்று கேட்கிறார்.

இதையடுத்து, பெண் வீட்டில் ஆமாம், அரவிந்த்சாமி அம்மாவே சொல்லிட்டாங்க, கேட்டுக்குங்க என்று கூற, மாப்பிள்ளையின் அம்மா யாருகிட்ட என்று எகிற எல்லோரும் கைகலப்பில் ஈடுபட கல்யாண வீடு கலாட்டா வீடாகிறது.

அப்போது இரவு 7.30 மணிக்கு கல்யாண வீட்டில் சண்டை ஓயவில்லை. வாக்குவாதம் முற்றுகிறது .மணமகள் மாப்பிள்ளையிடம் போய் உங்க வீட்டில் கேளுங்கள் என்று கூறுகிறார். கல்யாண வீட்டில் நடந்த கலாட்டாவால் ஃபர்ஸ்ட் நைட் நின்று போகிறது. எல்லோரும் வாக்குவாதத்தில் இருக்கும்போது, கமல்ஹாசன் ஃப்ரீஸ் என்கிறார். அப்படியே காட்சி உறைகிறது.

அப்போது கமல்ஹாசன் என்ன பார்க்கிறீங்க, ஆயிரம் பொருத்தம் பார்த்து நடத்துற கல்யாண வீட்லயே, இவ்வளவு கலாட்டா இருக்கத்தான் செய்யும். இங்கேயே இப்படினா என்று கேட்டு திரும்ப, மாப்பிள்ளை சார் நீங்க மாப்பிள்ளை வீடா பொண்ணு விடா என்று கேட்கிறார். கமல்ஹாசன் ஒரு பெரும் சிரிப்பு சிரிக்கிறார்.

இதையடுத்து, கமல்ஹாசன், பிக் பாஸ் கேமிரா திரை பின்னணியில் இங்க வீடும் பெருசு, கலாட்டாவும் பெருசு, எதிர்பாராததை எதிர்பாருங்கள், பிக் பாஸ் சீசன் 5 என்று அறிமுகம் செய்கிறார்.

இப்படி, பிக் பாஸ் தொடங்குவதற்கு முன்னாதாகவே புரமோவிலேயே கல்யாண வீட்டில் நடக்கும் சண்டைகளைக் காட்டி, இதைவிட பெருசாக இருக்கும் என்பது போல இந்த புரமோவில் கமல்ஹாசன் கூறுகிறார். அதனால், பிக் பாஸ் சீசன் 5 புரமோவைப் பார்த்த ரசிகர்கள் அட பிக் பாஸ் புரமோவில்யே இவ்வளவு சண்டையா பத்த வச்சுட்டாரே உலகநாயகன் என்று வியப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் புதிய புரமோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Bigg boss season 5 latest promo fight in marriage function house kamal haasan hosts

Next Story
Vijay TV Serial: மனைவி இருக்கும் போது துணைவியைத் தேடினால்… இப்படித்தான் அவஸ்தைப் படணும் கோபி!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com