Bigg Boss Tamil 5: கண்களை உருட்டி மிரட்டும் கமல்ஹாசன் புரொமோ… போட்டியாளர்கள் யார், யார்?

புரொமோவில் கோட் ஷூட்டில் இருக்கும் கமல்ஹாசன் கண்களை உருட்டி மிரட்டி, ஒரு வில்லத்தனமான சிரிப்புடன் ஆரம்பிக்கலாமா என்று பிக் பாஸ் சீசன் 5 லோகோவை அறிமுகம் செய்கிறார்

Bigg Boss season 5, Bigg Boss Tamil 5, Bigg Boss season 5 promo released, Kamal Haasan introduces bigg boss 5 logo, bigg boss season 5, பிக் பாஸ் சீசன் 5, பிக் பாஸ் சீசன் 5 புரொமோ, கமல்ஹாசன், பிக் பாஸ் சீசன் 5 போட்டியாளர்கள் யார், விஜய் டிவி, kamal haasan, kamal haasan bigg boss 5 promo, Bigg Boss season 5 soon, vijay tv, vijay tv bigg boss programme, Bigg Boss season 5 contestants

பிக் பாஸ் சீசன் 5 எப்போது தொடங்கும் என்று எதிர்பார்த்திருந்து காத்திருந்த ரசிகர்களுக்கு உலக நாயகன் கமல்ஹாசன் உருட்டி மிரட்டி ஆரம்பிக்கலாமா என்று பிக் பாஸ் சீசன் 5 புரொமோ வெளியாகி உள்ளது. இந்த சீசனில் போட்டியாளர்கள் யார் யார் என்பது இப்போது நெட்டிசன்கள் மற்றும் பிக் பாஸ் ரசிகர்களின் ஒரே டாக்காக மாறியுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் 4 சீசன்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வெற்றி பெற்றது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் 4 சீசன்களையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். கொரோனா பெருந்தொற்று காரணமாக பிக் பாஸ் நிகழ்ச்சி எப்போது நடக்கும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு அப்போது நடக்கும் இப்போது நடக்கும் என்று சமூக ஊடகங்களில் பலரும் ஊகங்களை கொடுத்துக் கொண்டிருந்தனர். ஒரு வழியாக பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி செப்டம்பரில் ஒளிபரப்பாகும் என்று செய்திகள் வெளியானது. இந்த சீசனையும் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார் என்று ஏற்கெனவே உறுதிசெய்யப்பட்டது. அதே போல, பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் என்று ஒரு உத்தேச பட்டியலும் சமூக ஊடகங்களில் சுற்றில் இருந்து கொண்டே இருக்கிறது.

இந்த சூழலில்தான், விஜய் டிவி பிக் பாஸ் சீசன் 5 புரொமோ ஆகஸ்ட் 31ம் தேதி மாலை 5.55 மணிக்கு வெளியாகும் என்று தெரிவித்தது. சொன்னபடி, இன்று மாலை விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன் 5 புரொமோ வெளியானது. இந்த புரொமோவில் கோட் ஷூட்டில் இருக்கும் கமல்ஹாசன் கண்களை உருட்டி மிரட்டி, ஒரு வில்லத்தனமான சிரிப்புடன் ஆரம்பிக்கலாமா என்று பிக் பாஸ் சீசன் 5 லோகோவை அறிமுகம் செய்கிறார். பிக் பாஸ் சீசன் 5 விரைவில் என்று புரோமோ விடியோ நிறைவடைகிறது.

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் லோகோ, பிக் நிற கண்களுடன் நடுவில் நட்சத்திரம் என மிரட்டலாக இருக்கிறது. பிக் பாஸ் சீசன் 5 புரோமோ வெளியாகி விரைவில் தொடங்கப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளதால் ரசிகர்கள் குஷியாகி உள்ளனர்.

அதே நேரத்தில், பிக் பாஸ் சீசன் 5 நிகழ்சியில், போட்டியாளர்கள் யார் யார் என்று ஒரு உத்தேச பட்டியல் டாக் சமூக ஊடகங்களில் உலா வருகிறது. அதில், ஜி.பி முத்து, ரம்யா கிருஷ்ணன், ‘மைனா’ நந்தினி, ‘மைனா’ சூசன், வடிவுக்கரசி, ரமேஷ் கண்ணா, நடிகை ஷகிலாவின் மகள் மியா, லட்சுமி ராமகிருஷ்ணன் என பலருடைய பெயர்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால், பிக் பாஸ் சீசன் 5 தொடங்கும்போதுதான் யார் யார் போட்டியாளர்கள் என்பது தெரியும். அதுவரை சொல்லப்படுவது எல்லாம் பல ஊகங்களும் வட்டாரங்களும் சொல்வதுதான் பட்டியலாக இருக்கும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Bigg boss season 5 promo released kamal haasan introduces logo

Next Story
Vijay TV Serial:சந்தியா ஐபிஎஸ் ஆவேன்னு பார்த்தால் இப்படி இருக்கியேம்மா? பேராசிரியர் வருத்தம்Raja Rani 2 serial, Raja Rani 2 serial today episode, Raja Rani 2 serial story updates, alya manasa, sidhu, parvathy engagement postponed, பார்வதி நிச்சயதார்த்தம் இல்லை, ராஜா ராணி 2 சிரியல், சரவணன், சந்தியா, ஆல்யா மானசா, சித்து, சந்தியா ஐபிஎஸ் கனவு, professor worry to sandhya, sandhya ips dream, vaishnavi sundaram, saivam ravi, parveena, vj archana, raja rani 2 sandhya sravanan misunderstanding, raja rani serial
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com