ரஜினி தொடர்பு… விஜயுடன் நடிப்பு… பிக் பாஸ் வாய்ப்பு… யார் இந்த தென்காசி சிபி சந்திரன்?

Biggboss Update : நடிகர் விஜயுடன் ‘மாஸ்டர்’ படத்தில் நடித்து பெரும் புகழ் பெற்ற சிபி தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளராக கலந்துகொண்டுள்ளார்

Biggboss Contestants Ciby Chandran Update : சின்னத்திரை ரசிகர்கள் மட்டுமல்லாது பலதரப்பட்ட மக்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 3-ந் தேதி கோலாகலமாக தொடங்கியது. வழக்கத்திற்கு மாறாக பல புதுமுகங்கள் பங்கேற்றுள்ள இந்த நிகழ்ச்சியில், இமான் அண்ணாச்சி, வருண், பிரியங்கா ஆகியோர் ரசிகர்களுக்கு மிகவும் நெருக்கமானவர்களாக உள்ளனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் முதல்முறையாக திருநங்கைகளுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

18 போட்டியாளர்கள் உள்ள இந்த பிக்பாஸ் வீட்டில், 3-வது நாளியேயே போட்டியாளர்களுக்கிடையே கருத்து வேறுபாடுகள் வாக்குவாதங்கள் மற்றும் சூடான விவகாதங்கள் தொடங்கிவிட்டது. இந்நிகழ்ச்சியில் புதுமுக நடிகராக கலந்துகொண்டுள்ள நடிகர் சிபி புவன சந்திரன், இதுவரை பிக் பாஸ் வீட்டில் கிட்டத்தட்ட அனைத்து சண்டைகளின் தொடக்கமாக இருந்துள்ளார். வீட்டின் கேப்டன் பதவிக்கு தனது பரிந்துரையை அறிவித்திருந்த இவருக்கு யாரும் வாக்களிக்கவில்லை.

நடிகர் விஜயுடன் ‘மாஸ்டர்’ படத்தில் நடித்து பெரும் புகழ் பெற்ற சிபி தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளராக கலந்துகொண்டுள்ளார். பிக்பாஸ் வீட்டில் இதுவரை, சண்டைகள் மற்றும் வாக்குவாதங்களின் போது அவர் தனியார் தெரிந்தார். மேலும் பணியில் மற்ற போட்டியாளர்களுடன் ஒத்துழைக்கவில்லை. 100 நாட்கள் நடைபெறவுள்ள பிக் பாஸ் நிகழ்ச்சியில் சிபி மற்ற போட்டியாளர்களுடன் போட்டியிடும் நிலையில், அவர்களுக்கு இவர் தொடக்கத்திலேயே ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.  

‘மாஸ்டர்’ படத்தில் நடிகர் தளபதி விஜய்யுடன் நடித்து புகழ்பெற்ற இவர், கடந்த 2018 ல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மருமகன் விசாகன் மூலம் கிரைம் த்ரில்லர் படமான ‘வனஜாகர் உலகம்’ படத்தில் அறிமுகமானார். அறிமுகப் படத்தில் அவரது நடிப்பிற்காக பலரும் பாராட்டுக்களை தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து பல குறும்படங்களிலும் நடித்துள்ளார். இப்போது, ​​அவர் சூர்யாவின் நடிப்பில் உருவாகி வரும் ‘எதற்க்கும் துணிந்தவன்’ படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வரும் சம்பர் மாதம் வெளியாகும்.

தமிழகத்தின் தென்மாவட்டமான தென்காசியைச் சேர்ந்த ஒரு எளிய குடும்பத்தில் பிறந்த சிபி புவன சந்திரன், சினிமா பின்னணி இல்லாமல் தற்போது சினிமாவில் நுழைந்துள்ளார். இதற்காக கடந்த காலத்தில் அவர் மாடலிங் மற்றும் விளம்பர படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Bigg boss season 5 tamil contestants cibi chandran update

Next Story
‘கணவர் இறந்தப்போ அழுகை வரல; கோபம்தான் வந்தது!’ மனம் திறந்த பிக் பாஸ் பாவனி ரெட்டிBigg Boss Tamil 5, Bigg Boss 5, Pavani Reddy open talk, Pavani Reddy open talk about her husband suicide, பிக் பாஸ், பிக் பாஸ் 5, பாவனி ரெட்டி, பாவனி ரெட்டி கணவர் இறந்தப்போ அழுகை வரல கோபம்தான் வந்தது, Pavani Reddy husband suicide, pavani reddy no tears buy more angry while her husband suicides, bigg boss, pavani reddy
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express

X