Advertisment

பிக் பாஸ் வீட்டில் குத்துவிளக்கு யாரு..? பலே தீபாவளி ஷோ

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில், பிக் பாஸ் வீட்டில் குத்து விளக்கு மாதிரி இருக்கிறார்கள் என்ற கேள்விக்கு போட்டியாளர்கள் இரண்டு சீரியல் நடிகைகளின் பெயர்களைக் கூறியுள்ளனர்.

author-image
WebDesk
New Update
bigg boss tamil, bigg boss tamil season 6, gp muthu, rachitha, myna, bigg boss, kamal haasan, vikraman, azeem

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில், பிக் பாஸ் வீட்டில் குத்து விளக்கு மாதிரி இருக்கிறார்கள் என்ற கேள்விக்கு போட்டியாளர்கள் இரண்டு சீரியல் நடிகைகளின் பெயர்களைக் கூறியுள்ளனர்.

Advertisment

விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 6 விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசனில் அமுதவாணன், அசல் கோளாறு, ஆயிஷா, அஜீம், தனலக்ஷ்மி, தினேஷ், ஜனனி, கதிரவன், மகேஸ்வரி, மணிகண்டன், நந்தினி, நிவாஷினி, குயின்ஸி, ரசித்தா, ராம், ராபர்ட், ஷெரினா, சிவின், விக்ரமன், சாந்தி, ஜி.பி. முத்து என 21 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். இதுவரை பிக் பாஸ் வீட்டில் இருந்து ஜி.பி. முத்து, சாந்தி ஆகிய 2 பேரும் வெளியேறி உள்ளனர். இந்த சீசனையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார்.

பிக் பாஸ் சீசன் 6 போட்டியாளர்களுக்கு இடையே சண்டை, கலாட்டா, கொண்டாட்டம் என கலைகட்டத் தொடங்கியுள்ளது. தற்போது பிக் பாஸ் வீட்டில் உள்ள 19 போட்டியாளர்களும் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை பிக் பாஸ் வீட்டிலேயே கொண்டாடுகிறார்கள்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பிக் பாஸ் வீட்டில் சிறப்பு ஷோ இன்று இரவு ஒளிபரப்பாகிறது. தீபாவளி ஸ்பெஷல் ஷோவுக்கான இரண்டாவது புரொமோ வெளியாகி உள்ளது. அதில் பிக் பாஸ் வீட்டில் ஒவ்வொருத்தரும் எப்படிப்பட்டவர் என பெயர் கொடுக்கப்படுகின்றது. அதில் இந்த வீட்டை அலங்கரிக்கும் தோரணம் மாதிரி இருப்பவர் அமுதவானன் என்றும் குத்துவிளக்கு மாதிரி மகேஸ்வரி மற்றும் ரட்சிதா என்றும் டப்பென்று வெடிப்பது ஜனனி என்றும் கூறுகிறார்கள். அதே நேரத்தில், பிக்பாஸ் வீட்டில் கொளுத்திப்போடுவது யார் எனக் கேட்க பிக் பாஸ் புரோமோ முடிவடைகிறது. இதனால், பிக் பாஸ் வீட்டில் குத்துவிளக்காக இருப்பவர் மகேஸ்வரி, ரட்சிதா பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Bigg Boss Tamil Bigg Boss
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment