பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கும் தேதி அறிவித்த நாளில் இருந்தே நெட்டிசன்கள் தங்களது பணிகளை தொடங்க தயாராகிவிட்டனர் என்று தான் சொல்ல வேண்டும். அவர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப பிக்பாஸ் சீசன் 6 தொடங்கிய முதல் நாளே பல கபலிகரங்கள் அரங்கேறியுள்ளது.
கடந்த அக்டோபர் 09-ந் தேதி தொடங்கிய பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி முதல் நாளிலேயே சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. 20 பேருக்கு 2 கழிவறையில் ஜி.பி முத்து ஜிப்பு போடாத வரை பெரிய சிரிப்பலையும், சில அதிரடி சம்பவங்களும் நடந்துள்ளது. டிக்டாக் வீடியோக்களில் நடனம் மற்றும் முகபாவனைகளால் அடித்து தும்சம் செய்த ஜி.பி.முத்து பிக்பாஸ் வீட்டிலும் அந்த பாணியை கையில் எடுத்துள்ளார்.
மழையில் தன்தையே மறந்து ஆட்டம் போட்டதை மிக்ஸ் செய்த நெட்டிசன்கள் தங்களுக்கு இடைவிட வேற என்ன கண்டன்ட் வேணும் என்பது போன்று இணையத்தில் வைரலாகி வருகினறனர். இது ஒருபுறம் இருக்க மறுபுறம் பாடலுக்கு காலையில் எழுந்து வி.ஜே. மகேஷ்வரி செய்த அலப்பறைகள் கொஞ்சம் ஓவராகவே ட்ரோலாகி வருகிறது.
காலையில எழுந்து ஹாயாக வாக்கிங் போகும் மகேஷ்வரி, அடுத்து காலைக்கடனை முடிக்க கழிவறை நோக்கி ஓடுகிறார். இவரோடு நேரம் போல அஙக எல்லாம் ஹவுஸ்புல்லா இருக்கு. ஆனாலும் அவசரத்துல இருக்க மகேஷ்வரி அமுதவாணன் என்று கூப்பிட இதை கேட்டு கழிவறையில் இருக்கும் அமுதவாணனுக்கு தூக்கி வாரிபோடுகிறது.
ஏன்டா இங்க வந்து நிம்மதியா இருக்க விடமாட்டீங்களா என்று கேட்டும் அளவுக்கு ரியாக்ஷன் கொடுக்கும் அமுதவாணன், மகேஷ்வரி ஜி.பி.முத்து இருவரையும் நாயகன் நாயகியாக மாற்றி அலப்பறை கொடுக்க நினைக்கிறார். ஆனா சுதாரித்துக்கொண்ட மகேஷ்வரி ஜி.பி.முத்து எனக்கு அண்ணன் மாதிரி அவர பார்த்தாலே சகோ ஃபீல் தான் என்று சொல்லிவிடுகிறார்.
இதை கேட்டுக்கொண்டே கழிவறையில் இருந்து வெளியில் வரும் ஜி.பி.முத்து மகேஷ்வரி என்னை அண்ணானு சொன்னது ரொம்ப சந்தோஷம் இந்த வார்த்தை கேட்க கொடுத்து வச்சிருக்கனும் என்று சொல்லிக்கொண்டு இருக்க திடீர்னு பார்த்தால் தான் ஜிப்பு போடவில்லை என்று தெரிந்து பின்னாடி திரும்பி ஜிப்பு போடுகிறார். இதை பார்த்த அமுதவாணன் ஏன் அப்படி திரும்புராறு என்று கேட்க அவரு ஜிப்பு போடல அதான் அப்படி திரும்பி போடுறாறு என்று சொலிட்டாரு. இதை ட்ரோல் செய்து வரும் நெட்டிசன்கள் அண்ணா அண்ணானு சொல்லி மானத்தையே வாங்கிட்டீயேமா என்று சொல்லி கலாய்த்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“