விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே உடனடியாக பலருக்கும் நினைவுக்கு வரும் முகங்கள் என்றால் அது, ஓவியா, கமல்ஹாசன், வனிதா விஜயகுமார், லாஸ்லியா, சிவாங்கி ஆகியோரின் முகங்களாகத்தான் இருக்கும்.
பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கியது முதல் முடியும் வரை 105 நாளும் டி.ஆர்.பி. பிக் பாஸ் நிகழ்ச்சிதான் டாப்பில் இருக்கும். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு கிடைத்த வரவேற்பை வைத்துதான், தற்போது பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி வரை வந்துள்ளது.
உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்க உள்ள பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சிக்கான புரோமோவில், கமல்ஹாசனின் பேச்சு ரசிகர்கள் மத்தியில் நிகழ்ச்சி மீதான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. ஏனென்றால், இதுவரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரே வீடு என்பதாக இருந்து வந்த நிலையில், தற்போது 2 வீடு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பிக் பாஸ் சீசன் 7 வழக்கமான முந்தைய சீசன்களைப் போல இல்லாமல், எல்லாவற்றிலும் பெரிய மாற்றங்களுடன் மிகவும் சுவாரசியமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
அதே நேரத்தில் இந்த பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களாக யார் யார் பங்கேற்கப் போகிறார்கள் என்ற செய்திகளும் ஊகங்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
அந்த வகையில், இந்த பிக் பாஸ் சீசன் 7ல் 90 கிட்ஸ் மனம் கவர்ந்த நாயகி, மூத்த நடிகர் விஜயகுமாரின் மகள் ஸ்ரீதேவி விஜயகுமார் போட்டியாளராக பங்கேற்க உள்ளார் என்கிற தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
இந்நிலையில், இந்த பிக் பாஸ் சீசனில், இரண்டு வீடுகள் இருக்கப் போகிறது என்ற அறிவிப்பால், ரசிகர்கள் மத்தியில் நிகழ்ச்சி மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது. அதே நேரத்தில், பிக் பாஸ் சீசன் 7-ல் பிக் பாஸ் வீட்டிற்குள் நடிகர் விஜயகுமார் வீட்டில் இருந்து இன்னொரு முக்கிய நபரும் போட்டியாளராக களமிறங்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.
பிரபல நடிகை வனிதா விஜயகுமார் வெளியிட்டுள்ள ஒரு இன்ஸ்டாகிராம் பதிவில் “என் உலக அழகி ஜோவிகாவே, உன்னை நான் நேசிக்கிறேன், நீ என்ன செய்தாலும், கடவுள் அருள் உன்னிடம் நிறைந்திருக்கும்” என்று தனது பதிவில் எழுதியுள்ளார். இதனால், விஜயகுமாரின் மகள் சித்தி ஸ்ரீதேவியுடன் இணைந்து விஜயகுமாரின் மூத்த மகள் வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகாவும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் களமிறங்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், இது பற்றி அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் எதுவும் வெளியாக வில்லை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“