விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 8 விரைவில் தொடங்க உள்ள நிலையில், பிக் பாஸ் வீட்டுக்குள் செல்ல போட்டியாளர்களாக யார் யார் தேர்வாகப் போகிறார்கள் என்ற ஊகங்கள் சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது. அந்த வகையில், பிக் பாஸ் சீசன் 8 போட்டியாளர்களில் பட்டியலில் இவருடைய பெயரும் இருக்கலாம் என்று பேசப்படுகிறது.
பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் கடந்த 7 சீசன்களையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிலையில், அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதையடுத்து, பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கப் போகும் பிரபலம் யார், என்ற ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்த நிலையில், பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குவார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி எப்போது தொடங்கும், பிக் பாஸ் வீட்டுக்குள் செல்லப்போகும் போட்டியாளர்கள் யார் யார், என்று சமூக வலைதளங்களில் ஊகங்களும் பேச்சுகளும் பரவலாக எழுந்துள்ளன. பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் யாராக இருக்கும் என்று ரசிகர்கள் பலரும் தெரிந்துகொள்ள ஆர்வமாக உள்ளனர்.
ஆனால், பிக் பாஸ் சீசன் 8 நிகழ்சியில் பங்கேற்கப் போகும் போட்டியாளர்கள் யார் என்ற அதிகாரப்பூர்வமான தகவல் இதுவரை வரவில்லை. இருப்பினும், சில பிரபலங்கள் பெயர்கள் அடிபட்டு வருகிறது. அப்படி அடிபடும் பெயர்களில் பலர் புதுமுகம் என்றாலும், ஏற்கனவே பங்கேற்ற போட்டியாளர்களூம் மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்புள்ளதாக கூறுகிறார்கள்.
அந்த வகையில், பிக் பாஸ் சீசன் 8 நிகழ்சியில் பங்கேற்க உள்ளதாக 15 போட்டியாளர்களின் பெயர்கள், விவரங்கள் இணையத்திலும் சமூக வலைதளங்களிலும் உலாவந்து கொண்டிருக்கிறது.இந்த பட்டியலில் உள்ள பெயர்கள் சமூக வலைதளங்களில் ஒவ்வொரு நாளும் மாறிக்கொண்டே இருக்கிறது. அதனால், அவரவர் ஊகங்களின்படி, அவரவர் விருப்பப்படி ஒரு பெயரை சேர்த்து சுற்றுகளுக்கு விட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
அதே நேரத்தில், விஜய் டிவியில் பிக் பாஸ் சிசன் 8 தமிழ் நிகழ்ச்சி, அக்டோபர் முதல் வாரம் 6ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இது குறித்தும் இன்னும் உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை.
இந்த சூழலில், இன்ஸ்டாகிராம் பிரபலம் திவாகரன், பிக்பாஸ் சீசனில் போட்டியாளராக களமிறங்கினால், நானே இறுதியில் வெற்றி பெறுவேன் என்று நம்பிக்கை தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்..
நகைச்சுவை நடிகர் சதிஷ், ஹீரோவாக நடித்துள்ள படம் "சட்டம் 7என் கையில்".. சஸ்பென்ஸ் + ஆக்ஷன் + திரில்லர் என இந்த படம் வெளிவர போகிறது.. சிக்ஸர் படத்தின் டைரக்டர்தான் இந்த படத்தையும் டைரக்ட் செய்திருக்கிறார்.. வருகிற 27ம் தேதி இந்த படம் வெளியாகிறது. இந்த படத்திற்கான ப்ரமோஷன் நிகழ்ச்சி தற்போது நடந்துள்ளது..
இதில், பல பிரபலங்கள் பங்கேற்று வாழ்த்து கூறியிருக்கிறார்கள். திவாகரன் பேட்டி: அந்தவகையில், இன்ஸ்டாகிராம் பிரபலம் திவாகரனும் இந்த படத்தில் நடித்திருக்கிறார்.. பின்னர் செய்தியாளர்களிடம் திவாகரன் பேசும்போது, படத்தில் நடித்த அனுபவம் குறித்து பேசினார்.
இந்தப் படத்திற்கு பொதுமக்கள்கிட்ட இருந்து நல்ல ரெஸ்பான்ஸ் கிடைக்கும். இந்த படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் சதீஷ் அண்ணா ஆக்சிடன்ட் ஆகி அழும் காட்சி நன்றாக இருந்தது என்று சொன்ன திவாகரன் அந்த சீனை நடித்தும், அழுதும் காட்டினார். பிறகு "சொல்லாமலே யார் பார்த்தது" என்ற பூவே உனக்காக படத்தின் பாடலை 4 வரி பாடி காட்டினார். உடனே செய்தியாளர்கள் போதும், போதும் என்றதும், திவாகரன் பாடுவதை நிறுத்திவிட்டார்.
பிக்பாஸ்: அப்போது செய்தியாளர்கள், பிக்பாஸ் பற்றி கேள்வி எழுப்பினார்கள்.. அதற்கு திவாகரன், "பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்வது குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வமான தகவலும் வரவில்லை.. எல்லா மீடியாவிலும் என் பெயர்தான் குறிப்பிட்டு வருகிறார்கள். நான் ஏற்கனவே 200 வீடியோக்களை பதிவிட்டு, ஏகப்பட்ட கேலி கிண்டல்களை கடந்து இப்படி வெற்றி பெற்றிருக்கிறேன்.. அந்தவகையில், அதிகளவில் என்னுடைய பெயர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அடிபடுகிறது.
விஜய் டிவியில் எனக்கு வாய்ப்பு வரலாம்.. எப்போதுமே விஜய் டிவி, யார் பெயரையும் சொல்ல மாட்டாங்க.. பிக்பாஸ் துவங்கும்வரை, சீக்ரெட்டாகவே பெயர் வெச்சிருப்பாங்க . என்ன வேணும்னாலும் நடக்கலாம்.. அதனால், நீங்க தைரியமா இருங்கன்னு ரசிகர்களும், மீடியாக்களும் சொல்றாங்க. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. அதனால நானும் வெயிட் பண்றேன்” என்று திவாகரன் கூறுகிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“