தமிழில் பிக் பாஸ் நிகழ்ச்சி விஜய் தொலைக் காட்சியில் ஒளிபரப்பபட்டு வருகிறது. இதுவரை 7 சீசன்கள் நிறைவடைந்த நிலையில், 8-வது சீசன் விரைவில் தொடங்கப்பட உள்ளது. நடிகர் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த நிலையில், இந்த சீசனில் கமல் விலகுவதாக அறிவித்தார்.
இதையடுத்து முதல் முறையாக இந்த நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க உள்ளார். இதனால் பலரும் ஆர்வமுடன் இந்த சீசனுக்கு காத்திருக்கின்றனர். அக்டோபரில் 8-வது சீசன் தொடங்கப்பட உள்ள நிலையில், நிகழ்ச்சிக்கான போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து பிரம்மாண்டமாக தொடங்கப்படும் சீசன் 8 நிகழ்ச்சி அக்டோபர் முதல் வாரம் அதாவது 6-ம் தேதி ஞாயிற்றுக் கிழமை தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“