பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி ஆடிஷனில் சில விஜய் டிவி பிரபலங்கள் கலந்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது, சரத், பாவனா, மாகாபா மற்றும் உமா ரியாஸ் ஆகியோர் ஆடிஷனில் கலந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இதில் உமா ரியாஸ் குக் வித் கோமாளி நிகழ்ச்சி நடத்தியுள்ளார். இவரது மகன் ஷாரிக் ஏற்கனவே பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
Advertisment
நடிகை ரேகா நாயர்
தொடர்ந்து, பாவனா சூப்பர் சிங்கர் உட்பட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர். அதேபோல் மாகாபா, சரத் விஜய் டிவி பிரபலங்கள்தான். மேலும் இதில் ரேகா நாயர் கலந்துகொள்ள உள்ளார். இவர் இரவின் நிழல் படத்தில் நடித்திருந்தார். அதில் ஒரு காட்சியை பயில்வான் ரங்கநாதன் விமர்சிக்க அவரை அடிக்க நடுரோட்டில் பாய்ந்தவர் இவர்தான்.
இதுவரை 6 சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில், 7ஆவது சீசன் வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சீசனையும் வழக்கம் போல் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்க உள்ளார்.
Advertisment
Advertisements
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“