பாலாஜி உங்களுக்கு அண்ணனா? என்ன சொல்றீங்க ஷிவானி… ரசிகர்கள் ஷாக்!
என்ன இவர்கள் ரக்ஷா பந்தன் பண்டிகைக்கு அண்ணன் தங்கை போல வாழ்த்து சொல்லிக்கொள்கிறார்கள். என்ன சொல்றீங்க ஷிவானி, பாலாஜி உங்களுக்கு அண்ணனா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
என்ன இவர்கள் ரக்ஷா பந்தன் பண்டிகைக்கு அண்ணன் தங்கை போல வாழ்த்து சொல்லிக்கொள்கிறார்கள். என்ன சொல்றீங்க ஷிவானி, பாலாஜி உங்களுக்கு அண்ணனா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை ஷிவானியும் மற்றொரு போட்டியாளர் முருகதாஸ் பாலாஜியும் காதலிக்கிறார்கள் என்று கிசுகிசுக்கப்பட்ட நிலையில், ரக்ஷா பந்தணை முன்னிட்டு பாலாஜி வாழ்த்து அனுப்பியிருக்கிறார். அதற்கு ஷிவானி நன்றி டெரிவித்துள்ளார். இதைப் பார்த்த நெட்டிசன்கள், ஷிவானி என்ன சொல்றீங்க பாலாஜி உங்களுக்கு அண்ணனா என்று அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.
Advertisment
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி அதன் சர்ச்சைகளுக்காக மட்டுமல்லாமல் அந்த நிகழ்ச்சியில் அந்த 100 நாட்களுக்குள் ஏற்படும் காதல் ட்ராக்குகளுக்காகவும் பிரபலம். முதல் சீசனிலும், 2வது சீசனிலும் 3வது சீசனிலும் அப்படியான லவ் டிராக்குகள் போய்க்கொண்டிருந்தது.
பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் அப்படியான சீரியஸ் காதல் விவகாரம் எதுவும் இல்லை என்றாலும், நடிகை ஷிவானி, பாடி பில்டர் முருகதாஸ் பாலாஜியுடன் நெருக்கமாக பழகி வந்தார். பலரும் ஷிவானியும் பாலாஜியும் காதலிக்கிறார்கள் என்று கிசுகிசு பேசினார்கள். பிக் பாஸ் வீட்டுக்குள் ஷிவானியைப் பார்க்க சென்ற அவருடைய அம்மா ஒரு பொது நிகழ்ச்சி என்றுகூட பார்க்காமல் ஷிவானியை கடுமையாக திட்டினார். ஷிவானியும் பயங்கரமாக அழுதார். அதன் பிறகு, பாலாஜி தான் ஷிவானியைக் காதலிக்கவில்லை என்று கூறினா. ஆனாலும், பிக் பாஸ் நிகழ்சி முடிந்த பிறகும், ஷிவானியும் முருகதாஸ் பாலாஜியும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலானாது. நெட்டிசன்கள் பலரும் ஷிவானியும் பாலாஜியும் காதலிப்பதாக மீண்டும் கிசுகிசு பேசினார்கள்.
Advertisment
Advertisements
இந்த நிலையில்தான், நேற்று (ஆகஸ்ட் 22) ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு, பாலாஜி ஷிவானிக்கு ரக்ஷா பந்தன் என வாழ்த்து அனுப்பியுள்ளார். அதற்கு, ஷிவானி தேங்க்ஸ்டா பாலா என்று நன்றி கூறியுள்ளார்.
இதைப் பார்த்த நெட்டிசன்கள், என்ன இவர்கள் ரக்ஷா பந்தன் பண்டிகைக்கு அண்ணன் தங்கை போல வாழ்த்து சொல்லிக்கொள்கிறார்கள். என்ன சொல்றீங்க ஷிவானி, பாலாஜி உங்களுக்கு அண்ணனா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். கிசுகிசுக்களை வைத்து காதல் ஜோடி என்று பார்த்தால், இவர்கள் அண்ணன் தங்கைகள் போல மாறிவிட்டார்களே என்று நெட்டிசன்கள் ஷாக் ஆகியுள்ளனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"