பிக் பாஸ் பிரபலம் ஷிவானி அந்தரத்தில் பறந்து யோகா செய்யும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
Advertisment
விஜய் டிவியில் ஒளிப்பரப்பான பகல்நிலவு சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் ஷிவானி. அதன்பின் சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்தவர், அஸீமுடன் இணைந்து ஜோடி நிகழ்ச்சியிலும் கலந்துக் கொண்டார். பின்னர் அதே அஸீமுடன் கடைக்குட்டி சிங்கம் சீரியலிலும் நடித்தார்.
அதன்பின் ஷிவானி, விஜய் டிவியின் மாஸ்டர் பீஸ் ஷோவான பிக் பாஸ் சீசன் 4ல் கலந்துக் கொண்டார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவரின் நடனத்திற்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தனர். இப்போது பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியிலும் ஷிவானி பங்கேற்றார். ஆனால் இப்போது அவருக்கு பதிலாக ஐஸ்வர்யா தத்தா கலந்துக் கொள்கிறார்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவ் ஆக இருக்கும் ஷிவானி அவ்வப்போது, புகைப்படம் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். இவரது பதிவுகள் ஏராளமான வீயூவ்ஸ் மற்றும் லைக்ஸ்களை பெற்று வருகிறது. இவரை சமூக வலைதளங்களில் மில்லியன் கணக்கானோர் பின் தொடர்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஷிவானி, ஏரியல் யோகா செய்து அதனை வீடியோவாக வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் ஷிவானி, அந்தரத்தில் தொங்கியவாறே, யோகா செய்துள்ளார். இந்த வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.