Shivani Mother Enters Bigg Boss House Viral Promo : சமீபத்தில் வெளியான பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோ, மக்களிடத்தில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் மிகவும் விறுவிறுப்பாக நகர்ந்துகொண்டிருக்கிறது பிக் பாஸ் நான்காம் சீசன். மற்ற சீசன்களைவிட இந்த சீசன் ஆரம்பத்திலிருந்து ஏராளமான விமர்சனங்களுக்கு உள்ளானது. இந்த ரியாலிட்டி நிகழ்ச்சியில் தேர்ந்தெடுக்கப்படும் போட்டியாளர்கள் பெரும்பாலும் லைம் லைட்டில் இருந்து மறைந்தவர்களும், லைம் லைட்டை நோக்கி நகர்பவர்களும்தான். அந்த வரிசையில் கடந்த சில மாதங்களாக அசத்தலான நடன வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் அப்லோட் செய்து ‘4 மணி ஷிவானி’ என நெட்டிசன்களால் அன்போடு அழைக்கப்பட்ட சின்னதிரை நடிகை ஷிவானியும் ஒருவர்.
வீட்டிற்குள் செல்வதற்கு முன்பே மக்களிடத்தில் அதிக வரவேற்பைப் பெற்றிருந்த ஷிவானிக்கு ஏராளமான சோஷியல் மீடியா ஃபாலோயர்கள் உள்ளனர். இதுவே, ஷிவானிக்கான தனி படையை ஆரம்பத்திலேயே உருவாக்கியது. ஆனால், 80 நாள் ஆகியும் பிக் பாஸ் வீட்டிற்குள் பெரிதாக எந்தவித கன்டென்ட்டும் கொடுக்காமல் இருப்பது மக்களிடையே பெரும் அதிருப்தியையே ஏற்படுத்தியது.

வீட்டிற்குள் சென்ற நாளிலிருந்து, சக போட்டியாளரான பாலாஜியோடு மட்டுமே எந்நேரமும் நேரத்தைச் செலவழிப்பது, பார்க்கும் நேரத்திலெல்லாம் எதையாவது சாப்பிட்டு இருப்பது என்கிற பிம்பம் மட்டுமே தற்போது ஷிவானி மீது இருக்கிறது. வீட்டு வேலைகளிலிருந்து பிக் பாஸ் டாஸ்க் வரை அனைத்திலும் ஈடுபாடு குறைந்து ‘மிக்ஸர்’ சாப்பிடும் கேட்டகிரியில் தள்ளப்பட்டிருக்கிறார் ஷிவானி. இது மக்களின் வெறுப்பையே அதிகரிக்கச் செய்தது.
இந்நிலையில் இந்த வாரம் ஃப்ரீஸ் டாஸ்க். அதாவது போட்டியாளர்களின் குடும்பத்தினர் வீட்டிற்குள் வரும் டாஸ்க். இதன் முதல் ப்ரோமோ தற்போது வெளியாகி, வைரலாகப் பரவிக்கொண்டிருக்கிறது. வீட்டிற்குள் நுழைந்த நாளிலிருந்து தன் அம்மாவை மிகவும் மிஸ் செய்வதாகக் கூறும் ஷிவானியின் தாய் என்ட்ரியோடு தொடங்குகிறது அந்த ப்ரோமோ. ‘ஆராரோ ஆரிராரோ..’ பேக் கிரவுண்ட் பாடலோடு ப்ரோமோ தொடங்க, மறுமுனையில் ஷிவானி ஃப்ரீஸ் ஆகி நிற்கிறார். பிறகுத் தாயும் மகளும் கட்டியணைத்து அன்பைப் பரிமாறிக்கொள்கின்றனர். இதைப் பார்க்கும் சக போட்டியாளர்கள் நெகிழ்ச்சியோடு நிற்கின்றனர். இதனைத் தொடர்ந்து ஷிவனையை தனியே அழைத்துச் சென்று, “நீ எதுக்கு இந்த ஷோவுக்கு வந்த? நீ இந்த வீட்டுக்குள்ள பண்ணுறது வெளியே தெரியாதுன்னு நெனச்சுட்டு இருக்கியா?” என்று மிகவும் கோபமான தொனியில் கேட்கிறார் ஷிவானியின் தாய். அதற்கு விடை தெரியாமல் ஷிவானி முழிப்பதுபோல் ப்ரோமோ நிறைவடைகிறது.
இதுபோன்ற நிகழ்வு ஏற்கெனவே போன சீசனில் லாஸ்லியா பெற்றோர்கள் வந்தபோது அரங்கேறியது. இறுதியில் சமூகமாகவே முடிந்தது. அதேபோன்ற தோரணைதான் ஷிவானிக்கும் நடக்குமா? இல்லை வெளியே பாலாவோடு இணைத்துப் பேசுவதை எடுத்துக்கூறி ஷிவானியின் நடவடிக்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் அளவிற்கு ஷிவானியின் தாய் வார்னிங் கொடுத்துவிட்டுச் செல்வாரா என்பதைப் பார்த்தால்தான் தெரியும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”