scorecardresearch

என்னா கெத்து! சின்ன வயது ஷிவானி ஸ்டைலைப் பாருங்கள்

பிக் பாஸ் போட்டியாளர் ஷிவானி 11 ஆண்டுகளுக்கு முன்பு சிறுமியாக இருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.

shivani narayanan, bigg boss, bigg boss season 4, ஷிவானி, ஷிவானி சிறுமி புகைப்படம், பிக் பாஸ் சீசன் 4, பிக் பாஸ், ஷிவானி நாராயணன், விஜய் டிவி, bigg boss shivani narayanan, shivani little girl, shivani photos viral, tamil viral news,viral photos, bigg boss, vijay tv
Bigg Boss 4 Tamil Shivani

பிக் பாஸ் 4 நிகழ்ச்சியில் இளைஞர்களைக் கவர்ந்துவரும் போட்டியாளர் ஷிவானி நாராயணன் 11 ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. பிக் பாஸ் ஷிவானி சிறுமியாக எப்படி இருந்திருக்கிறார் பாருங்கள்.

ரெட்டை ரோஜா, பகல் நிலவு ஆகிய சீரியல்களில் நடித்து தொலைக்காட்சி பார்வையாளர்கள் இடையே பிரபலமான நடிகை ஷிவானி நாராயணனுக்கு பெரிய ஒரு ரசிகர் கூட்டம் உருவானது. சீரியல்களைத் தாண்டி, சமூக ஊடகங்களில் அழகழகான புகைப்படங்களை வீடியோக்களை வெளியிட்டு கலக்கினார். ஷிவானி நாராயணன் இன்ஸ்டாகிராமில் வெளியிடும் புகைப்படங்களுக்கும் வீடியோக்களுக்கும் ஒரு பெரியரசிகர் கூட்டமே உள்ளது. இந்த சூழலில்தான் ஷிவானி பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் நடிகை ஷிவானி போட்டியாளராக பிக் பாஸ் வீட்டில் 62 நாட்களாக இருந்து வருகிறார். ஒவ்வொரு பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் ஒரு காதல் ஜோடி வலம் உருவாகி அந்த சீசனையே சுவாரஸியமாக்கிவிடுவார்கள். இந்த சீசனிலும் அப்படி ஒரு காதல் ஜோடி உருவாகி பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியை ஷிவானி, பாலாஜி இருவரும் சுவாரஸியமாக்கியிருக்கிறார்கள்.

இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பல போட்டியாளர்களின் புகைப்படம் வீடியொ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அந்த வகையில், பிக் பாஸ் நிகச்சி போட்டியாளர் ஷிவானி இதற்கு முன்பு இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்களால் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

ஷிவானி 11 ஆண்டுகளுக்கு முன்பு தான் சிறுமியாக இருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். 2009ம் ஆண்டு எடுக்கப்பட்டு 2019ம் ஆண்டு ஷிவானி எப்படி இருந்தார் என்ற புகைப்படமும் இணைத்து இந்த 10 ஆண்டுகளில் தான் இப்போது இருக்கும் நிலைக்கு கடவுளுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இந்த புகைப்படத்தில் ஷிவானி சிறுமியாக எப்படி இருக்கிறார்கள் என்று பாருங்கள். அப்போதே, இப்போது இருக்கும் ஷிவானிக்கான பொறி மின்னுவது தெரிகிறது.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Bigg boss shivani narayanan as little girl photo goes viral