சீரியல் நடிகரை மணந்துக் கொண்ட பிக் பாஸ் ரம்யா!

மும்தாஜ் மற்றும் ஜனனி ஐயர் ஆகியோர் ரம்யாவின் திருமணத்தில் கலந்துக் கொண்டனர். 

Singer Ramya NSK Married to Serial Actor Sathya: கடந்தாண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் – 2 ல் போட்டியாளராகக் கலந்துக் கொண்ட, பின்னணி பாடகி என்.எஸ்.கே.ராம்யா, சீரியல் நடிகர் சத்யாவை திருமணம் செய்து கொண்டுள்ளார். கடந்தாண்டு விஜய் டி.வி-யில் ஒளிபரப்பான ‘நீலகுயில்’ சீரியலில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

NSK Ramya - Sathya Wedding

NSK Ramya – Sathya Wedding

பழம் பெரும் நடிகர் என்.எஸ் கலைவாணரின் பேத்தியான ரம்யா, சங்கீதத்தின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். சிறு வயது முதலே கர்னாடிக் சங்கீதத்தை முறைப்படியாக கற்றார். இதுவரை தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி திரைப்படங்களில் பின்னணி பாடல்களை பாடியுள்ளார். குறிப்பாக ’நீ தானே என் பொன் வசந்தம்’ திரைப்படத்தில் இசைஞானி இளையராஜா இசையில், ரம்யா பாடிய  ’சற்று முன்பு பார்த்த மேகம் மாறி போக’, ‘சாய்ந்து சாய்ந்து’ ஆகியப் பாடல்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றன.

இந்நிலையில் தற்போது நடந்திருக்கும் ரம்யா – சத்யா திருமணம், காதல் திருமணமா அல்லது பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணமா எனத்  தெரியவில்லை. இத்திருமணத்தில் இருவரின் நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் கலந்துக் கொண்டனர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் சக போட்டியாளர்களாகக் கலந்துக் கொண்ட, மும்தாஜ் மற்றும் ஜனனி ஐயர் ஆகியோர் ரம்யாவின் திருமணத்தில் கலந்துக் கொண்டனர்.

ரம்யா – சத்யா திருமணத்தை வாழ்த்தி, பிக் பாஸ் தர்ஷனின் கேர்ள் பிரெண்ட் என சொல்லப்படும், சனம் ஷெட்டி தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். சத்யாவின் நெருங்கிய நண்பர் சத்யா, ரம்யா மற்றும் சத்யா இருவருக்கும் சனம் நெருக்கமானவர்.

இதற்கிடையே கடந்த 2017-ல் பின்னணி பாடகர் அர்ஜூன் என்பவரை மணம் முடித்திருந்தார் ரம்யா. பின்னர் இவர்கள் பிரிந்தது குறிப்பிடத்தக்கது.

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close