/tamil-ie/media/media_files/uploads/2018/11/Suja-Varunee-Marriage-6-1.jpg)
Suja Varunee Marriage, சுஜா வருணி
பிக் பாஸ் புகழ் சுஜா வருணி மற்றும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பேரன் சிவாஜி தேவ் இருவருக்கும் இன்று சென்னையில் உள்ள பிரபல ஹோட்டலில் திருமணம் நடைபெற்றது.
தமிழில் வெளியான கிடாரி, இரவுக்கு ஆயிரம் கண்கள், வாடீல் ஆகிய படங்களில் நடித்த சுஜா , கடந்த ஆண்டு நடத்தப்பட்ட பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் பங்கேற்றார். அதன் பிறகே இவர் பிக் பாஸ் சுஜா என்றே அழைக்கப்படுகிறார்.
இவரும் சிவாஜி கணேசனின் பேரனான சிவாஜி தேவ் சுமார் 11 வருடங்களாக காதலித்து வந்தனர். இருவரும் இணைந்து தங்களது திருமண தேதி சுஜாவின் பிறந்தநாள் அன்றே வெளியிட்டனர்.
சுஜா வருணி - சிவாஜி தேவ் திருமணம்
இந்நிலையில் சென்னை அடையாறு உள்ள கிரவுன் பிளாசா ஹோட்டலில் இன்று இவர்கள் திருமணம் சிறப்பாக நடைபெற்றது. இந்த திருமணத்தில் இருவீட்டாரும், பல பிரபலங்களும் பங்கேற்று இளம் தம்பதியை வாழ்த்தினர். அதன் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.