பிக் பாஸ் சண்டைக்கோழிக்கு டும் டும் டும் கல்யாணம்... ஃபோட்டோ உள்ளே...

பிக் பாஸ் சுஜா வருணி, சிவாஜி கணேஷனின் பேரன் சிவாஜி தேவ் இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருக்கின்றனர். அவர்கள் தங்கள் திருமணம் தேதியை வெளியிட்டுள்ளனர்.

தமிழில் வெளியான கிடாரி, இரவுக்கு ஆயிரம் கண்கள், வாடீல் ஆகிய படங்களில் நடித்த சுஜா வருணி, கடந்த aஅண்டு நடத்தப்பட்ட பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் பங்கேற்றார். இவர், வைல்ட் கார்டில் எண்ட்ரி கொடுத்திருந்தாலும் போட்டிகளில் வைல்டான சண்டைக்கோழியாகவே மாறிவிடுவார்.

போட்டியின்போது இவருக்கும் ஸ்னேகனுக்கும் நடந்த சண்டைகளை நம்மால் மறக்க முடியுமா என்ன? இருப்பினும் இவர் எவ்வளவு துணிவும், எளிமையும் கொண்டவர் என்பதையும் நாம் பார்த்தோம். அவர் வீட்டில் இப்போது ஒரு நல்ல காரியம் நடக்க இருக்கிறது.

பிக் பாஸ் சுஜா வருணி மற்றும் சிவாஜி தேவ் திருமணம் :

இவர் சிவாஜி கணேஷனின் பேரனும், ராம்குமாரின் மகனுமான சிவாஜி தேவ்வும் காதலித்து வந்தனர். சமீபத்தில் இவர்கள் இருவரும் கோவிலுக்கு சென்று புகைப்படம் எடுத்துக் கொண்டது இணையத்தில் பரவி வைரலானது.

இந்நிலையில் நடிகை சுஜா வருணியின் பிறந்தநாளான இன்று அவரது காதலர் திருமண தேதியை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “11 வருடக் காதல் இப்போது திருமணத்துக்கு வந்துவிட்டது. நம்முடைய கனவு நனவாகும் தருணம் நெருங்கிவிட்டது. எனக்கும் சுஜாவுக்கும் நவம்பர் 19-ம் தேதி திருமணம் நடைபெறுகிறது. இந்த பிறந்தநாளில் இதை சொல்லிக் கொள்கிறேன். சாகும் வரை பிரியாமல், அன்புடன் இருப்போம்” என்று கூறியுள்ளார்.

 

இதனை ரீடுவீட் செய்த சுஜா, “வெக்கமா இருக்கு அத்தான்… நன்றி. இந்த உலகிலேயே நான் தான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் பெண். லவ் யூ” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த பதிவிற்கு நெட்டிசன்கள் அனைவரும் தங்களின் வாழ்த்துக்களை பொழிந்து வருகின்றனர்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close