New Update
/tamil-ie/media/media_files/uploads/2021/06/suresh-as-mgr.jpg)
Bigg boss Suresh chakravarthy MGR getup in BB jodigal photo goes viral: பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர் கெட்டப்பில் சுரேஷ் சக்ரவர்த்தி; இணையத்தில் வைரலாகும் ஃபோட்டோ
விஜய் டிவியின் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் முழுசா எம்.ஜி.ஆராக மாறி இருக்கும் சுரேஷ் சக்ரவர்த்தியின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ரியாலிட்டி ஷோக்களுக்கு பெயர் பெற்ற விஜய் டிவி, டான்ஸ் நிகழ்ச்சிகளிலும் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறது. விஜய் டிவியில் ஜோடி, உங்களில் யார் அடுத்த பிரபு தேவா, கிங்ஸ் ஆஃப் டான்ஸ் போன்ற பல்வேறு நடன போட்டிகள் ஒளிப்பரப்பாகியுள்ளது. தற்போது ரசிகர்களை கவரும் புதிய முயற்சியாக பிக் பாஸ் போட்டியாளர்களைக் கொண்டு பிக் பாஸ் ஜோடிகள் என்ற நடன நிகழ்ச்சியை ஒளிப்பரப்பி வருகிறது.
இந்த பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில், 4 சீசன்களிலும் கலந்துக் கொண்ட போட்டியாளர்கள் பங்கேற்று வருகிறார்கள். இந்த நிகழ்ச்சியில் நடிகை வனிதா மட்டும் சில எபிஷோடுகள் ஜோடி இல்லாமல் பங்கேற்று வந்தார். இந்த நிலையில் வனிதாவுக்கு ஜோடி இருக்குமா அல்லது அவர் தனியாகவே ஆட போறாரா என்று கேள்வி எழுந்து வந்த நிலையில், சுரேஷ் வனிதாவுக்கு ஜோடியானார்.
தற்போது நடிகை வனிதா, இந்த வாரத்திற்கான எபிஷோடின் ஷூட்டிங்கில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் நடிகர், நடிகைகளைப் போன்ற கெட்டப்பில் உள்ளனர்.
இதில் ஹைலைட்டாக சுரேஷ் எம்.ஜி.ஆர் அவர்களைப் போல் கெட்டப் போட்டுள்ளார். இந்த புகைப்படம் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.