Bigg Boss Tamil 2: பிக் பாஸ் 2 நிகழ்ச்சி...பிண்ணனியும், மறைந்திருக்கும் வியாபாரமும்... ஷாக் ரிப்போர்ட்

Bigg Boss Tamil 2: பிக் பாஸ் தமிழ் 2 நிகழ்ச்சி : வெளிநாட்டில் இருந்து வந்த இந்த நிகழ்ச்சியில் நடப்பது உண்மையா?

Bigg Boss 2 : பிக் பாஸ் 2 தமிழ் நிகழ்ச்சி என்றாலே தமிழ்நாட்டில் தெரியாத ஆளில்லை. சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த நிகழ்ச்சியைத் தவறாமல் பார்த்து வருகின்றனர். பொதுமக்கள் அனைவரின் கவனத்தையும் இந்த நிகழ்ச்சி தன் வசமாக்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியை பெரும்பாலும் இரண்டு காரணத்திற்காக மட்டுமே பார்க்கிறார்கள்.

Bigg Boss Tamil: பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் முதல் சீசன்

Bigg Boss Tamil: பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் முதல் சீசன்

பிக் பாஸ் நிகழ்ச்சி மேல் அதிக ஆர்வம் கொண்டு பார்ப்பவர்கள், மற்றொரு பக்கம் நிகழ்ச்சியை விமர்சிப்பதற்காக பார்ப்பவர்கள். இந்த இரண்டு பிறிவுகளில் நீங்கள் எதைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் லாபம் பிக் பாஸ் நிகழ்ச்சி நடத்துபவர்களுத்தான்.

எப்படி? விளக்குகிறோம். அதற்கு முன்னதாக, நிகழ்ச்சியைப் பற்றிய சிறிய தொகுப்பு.

பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழகத்திற்குள் ஊடுருவியது எப்படி?

பிக் பாஸ்  நிகழ்ச்சி முதன் முதலில், நெதர்லேண்டில் உள்ள ‘எண்டமோல்’ நிறுவனத்தால் தொடங்கப்பட்டது. நெதர்லேண்ட் உள்ள தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ‘பிக் பிரதர்ஸ்’ என்ற பெயர் கொண்டு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அந்த நிகழ்ச்சியின் அதே வடிவத்தைக் கொண்டு 2006ம் ஆண்டு ஹிந்தி மொழியில் களம் இறங்கியது பிக் பாஸ்.  ஹிந்தி மொழியில் 10 சீசன்கள் கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் பிக் பாஸ் தற்போது 11வது சீசனை எட்டியுள்ளது. வட மொழியில் பல நல்ல தருணங்களையும், வீழ்ச்சிகளையும் சந்தித்த நிகழ்ச்சி, தமிழ் மொழியில் முதன் முதலில் கால் தடம் பதித்தது 2017ல் தான்.

Bigg Boss Tamil: பிக் பாஸ் தமிழ்

Bigg Boss Tamil: பிக் பாஸ் தமிழ்

நாடு முழுவதும் கலாச்சார சீர்கேடாகக் கருதப்படும் பிக் பாஸ் முதல் சீசன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியது நடிகர் கமல் ஹாசன். முதல் சீசனில், காயத்ரி, ஓவியா, ரைசா, நமீதா, ஜூலி, ஸ்னேகன், ஆரவ், கணேஷ் வெங்கட், ஹரிஷ், சுஜா எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Bigg Boss Tamil: பிக் பாஸ் தமிழ்

Bigg Boss Tamil: பிக் பாஸ் தமிழ்

சென்ற சீசனில், மக்கள் மனதைக் கொள்ளைக்கொண்டார் ஓவியா. இருப்பினும் அவரால் நிகழ்ச்சியைத் தொடர முடியவில்லை. தவிர்க்க முடியாத காரணத்தினால் போட்டியை விட்டு வெளியேறினார். ஆனால் பெரும்பாலான மக்களால் அதிகமாக விமர்சனம் செய்யப்பட்ட ஆரவ் டைட்டில் வின்னர் ஆனது எப்படி? இதற்குப் பின்னால் எதாவது ரகசியம் இருக்குமோ?

பிக் பாஸ் 2 நிகழ்ச்சி, உருவாக்கம் மற்றும் வியாபாரம்:

பிக் பாஸ் முதல் சீசனை தொகுத்து வழங்கியது போலவே இந்த ஆண்டும், பிக் பாஸ் 2 நிகழ்ச்சியை நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்குகிறார். 16 போட்டியாளர்கள் பங்குபெற்ற இந்த நிகழ்ச்சி கடந்த 17ம் தேதி தொடங்கியது. மும்தாஜ், யாஷிகா, ஜனனி, அனந்த் வைத்தியநாதன், டேனியல், ரம்யா, சென்ராயன் என 16 பேர் கலந்துகொண்டுள்ளனர். இதில் சர்ச்சைக்குரிய தம்பதி பாலாஜி மற்றும் நித்யாவும் அடங்குவார்கள். கவர்ச்சிக்காகவும், டிஆர்பிக்காகவும் நடிகர் நடிகைகளை உபயோகப்படுத்துகிறது பிக் பாஸ் குழு எனப் பலரும் கடுமையான விமர்சனங்களை முன்வைக்கின்றனர். இதனை ஆய்வு செய்தால் நமக்கும் அது சரியானது எனத் தோன்றும். அந்த அளவிற்குப் போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Bigg Boss Tamil 2: பிக் பாஸ் தமிழ் 2

Bigg Boss Tamil 2: பிக் பாஸ் தமிழ் 2

கவர்ச்சிக்காகக் கடந்த ஆண்டு ஓவியா, ரைசா போன்றவர்களை களமிறக்கிய இவர்கள், பிக் பாஸ் தமிழ் 2 நிகழ்ச்சியில் யாஷிகாவை கலந்துகொள்ள வைத்துள்ளனர். இந்தப் போட்டியில் கலந்துகொள்ளும் ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் லட்சக்கணக்கில் பணம் கொடுக்கப்படுவது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால் இதில் வோட்டிங் என்ற பெயரில் மக்களை ஏமாற்றி வருவதாகவும் சிலர் தெரிவிக்கின்றனர். ஏனெனில், போட்டியில் இருப்பவர்களில் யார் முதலில் வெளியேற வேண்டும் என்பதையெல்லாம் இவர்களே செட் அப் செய்து அதற்கு ஏற்றதுபோல செயல்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுகளும் எழுகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சி அமைக்க ஏற்படும் செலவுகள்: (இதன் கணக்குகள் சற்று முன்னும் பின்னுமாக இருக்கும்)

Bigg Boss Tamil 2: பிக் பாஸ் தமிழ் 2

Bigg Boss Tamil 2: பிக் பாஸ் தமிழ் 2 வீட்டின் செட் அப்

ஸ்டுடியோ செட்டிங் செலவு – ₹20 கோடி.

நிகழ்ச்சி ஆங்கர் கமலுக்கு – ₹ 20 கோடி.

மற்ற 14 பேருக்கு – ₹ 42 கோடி

100 நாள் படப்பிடிப்பு செலவு – ₹25 கோடி

முதல் நாள் மற்றும் கடைசி நாள் விழாச் செலவு – ₹ 3 கோடி

மொத்த செலவு – ₹110 கோடி

பிக் பாஸ் நிகழ்ச்சியினால் தனியார் தொலைக்காட்சி ஈட்டும் லாபம்: (இதன் கணக்குகள் சற்று முன்னும் பின்னுமாக இருக்கும்)

Bigg Boss Tamil 2: பிக் பாஸ் தமிழ் 2

Bigg Boss Tamil 2: பிக் பாஸ் தமிழ் 2

விளம்பரம் மட்டும் 30 வினாடிக்கு ₹ 25 லட்சம் என அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது. ஒரு நாளின் மொத்த வியாபார நிமிடங்கள் 25 (x 60 விநாடி = 1500/30 = 50x.25) என ₹12.5 கோடி வரவு. 100 நாட்களுக்கு வரவு ₹ 1250 கோடி. மொத்த லாபம் ₹ 1140 கோடிகள் என இத்தகைய பெரிய தொகையை ஒரே நிகழ்ச்சி மூலம் ஈட்டுகிறது தனியார் தொலைக்காட்சி.

பிக் பாஸ் குறித்து சிலரின் எதிர்மறை கருத்து:

Bigg Boss Tamil 2: பிக் பாஸ் தமிழ் 2

Bigg Boss Tamil 2: பிக் பாஸ் தமிழ் 2

பிக் பாஸ் என்ற நிகழ்ச்சி மூலம் பொதுமக்கள் ஏமாற்றப்படுகிறார்கள் என்று பலரும் தெரிவிக்கின்றனர். இந்த நிகழ்ச்சி முழுக்க முழுக்க ஸ்கிரிப்ட் நிகழ்ச்சி தான், உண்மையில்லை எனவும் தெரிவிக்கிறார்கள். ஆனால் இந்நிகழ்ச்சி மீது அதிகம் நாட்டம் கொண்டவர்களும், சம்மந்தப்பட்டவர்களும் இந்தத் தகவல்கள் உண்மையற்றது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் எந்த ஸ்கிரிப்ட் அல்லது பிளேனிங் இல்லை என்றே கூறுகின்றனர்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close