ஒரு வழியா பிக் பாஸ் 2 வீட்டு சிறைக்கு வேலை வந்தாச்சு!

Bigg Boass Tamil 2: பிக் பாஸ் தமிழ் 2 நிகழ்ச்சியில் 3 வாரங்களுக்கு பிறகு நடக்கும் எவிக்‌ஷம் மூலம் ஒருவர் வீட்டில் இருக்கும் சிறையில்...

Bigg Boss 2: பிக் பாஸ் தமிழ் 2 நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேறப் போகும் நபர் ஒருவரைத் தேர்வு செய்து, சிறையில் அடைக்க உள்ளார். இதன் முடிவுகள் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் தெரிய வரும்.

பிக் பாஸ் தமிழ் 2 நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்னதாகவே, வீட்டின் அம்சங்கள் மற்றும் கட்டமைப்பு குறித்த புகைப்படங்கள் வெளியானது. அப்போதே, பிக் பாஸ் தமிழ் 2 வீட்டில் சிறை செட் அப் இருப்பதைப் பார்த்து மக்கள் சற்று அதிர்ச்சி அடைந்தனர். ஏனெனில், இந்த ஆண்டின் 2ம் பாகம் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள செட் அப் தான் ஜெயில்.

Tamil Bigg Boss - Season 2

பிக் பாஸ் தமிழ் 2 வீட்டில் உள்ள சிறை

வீட்டிற்கு வெளியே, ஒரு ஓரத்தில் அமைக்கப்பட்டிருக்கும் இந்தச் சிறை நிச்சயம் போட்டியாளர்களுக்கு தண்டனை கொடுப்பதற்காக அமைக்கப்பட்டது என்று அனைவரும் தெரிந்துகொண்ட விஷயம். ஆனால் இந்த நிகழ்ச்சி தொடங்கி 3 வாரங்கள் முடிவடைந்த நிலையிலும் வெறும் பொம்மை போலவே இந்த ஜெயில் காட்சியளித்தது. ஒரு கட்டத்தில் போட்டியாளர்களே, ‘எதுக்கு இந்த ஜெயில்? சும்மாவே இருக்கு. என்ன செய்ய போறாங்க?’ என்று பேசும் அளவிற்கு இருந்தது. எனவே இத்தகைய சூழலில் தற்போது ஒரு வழியாக பிக் பாஸ் 2 வீட்டு ஜெயிலுக்கு ஒரு மதிப்பு கொடுத்து, அதன் உள்ளே செல்ல இருக்கும் நபரைத் தேர்வு செய்ய உள்ளனர்.

பிக் பாஸ் தமிழ் 2 நிகழ்ச்சியில் இந்த வார இறுதி எபிசோடில், வீட்டில் இருக்கும் ஒரு நபர் நிகழ்ச்சியை விட்டு வெளியேற உள்ளார். அந்த வகையில் நிகழ்ச்சியை விட்டு வெளியே செல்ல இருக்கும் நபர், மீதம் இருக்கும் போட்டியாளர்களில் ஒருவரைத் தேர்வு செய்து சிறையில் அடைக்க வேண்டும். அந்த நபரை யார்? ஏன் தேர்வு செய்யப்பட்டார்? செய்த தவறு என்ன? என்பது பற்றிய விளக்கத்தையும் அளிக்க வேண்டும்.

இன்று இரவு நடைபெற இருக்கும் இந்த நிகழ்ச்சியில் யார் போட்டியை விட்டு வெளியேறுகிறார் என்றும், யார் சிறைக்குள் செல்கிறார் என்றும் தெரிய வரும்.

×Close
×Close