பிக் பாஸ் தமிழ் 2: பாலாஜியின் சட்டன் சேஞ்ச் நித்யாவிற்கு பிடித்துள்ளதா? இது என்ன மாயம்

Bigg Boss Tamil 2: பிக் பாஸ் தமிழ் 2 நிகழ்ச்சியில் தாடி பாலாஜி மற்றும் அவரது மனைவி நித்யா இடையே மீண்டும் நல்லுறவு மலர...

Bigg Boss 2: பிக் பாஸ் தமிழ் 2 நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களில் ஒன்றாகத் தாடி பாலாஜி மற்றும் அவரது மனைவி நித்யா பங்கேற்றார். தமிழ் திரையுலகில் சர்ச்சைக்குரிய தம்பதிகளாக கருதப்படும் இவர்கள் இருவரும் இணைந்து இந்த நிகழ்ச்சிக்கு வந்த பின்னர், சண்டனைகளுக்கு பிரச்சனைகளுக்கும் பஞ்சமே இல்லை.

பிக் பாஸ் தமிழ் 2 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள இவர்கள் இருவருக்கும் போஷிக்கா என்ற பெண் குழந்தை உள்ளது. திருமணமாகி 8 வருடங்களுக்குப் பிறகு, இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனைகள் காரணமாகப் பிரிந்து வாழ்கின்றனர். சுமார் 7 மாதங்கள் பிரிந்து வாழ்ந்த நிலைக்குப் பின்னர், இருவரும் நேருக்கு நேர் சந்தித்த முதல் இடம் பிக் பாஸ் 2 இல்லத்தில் தான்.

பாலாஜி மற்றும் நித்யா குறித்த பிற செய்திகளுக்கு இந்த லிங்க் கிளிக் செய்யவும்

நிகழ்ச்சி தொடக்கத்தின் முதல் வாரத்தில் இருவரும் ஒருவருடன் ஒருவர் சகஜமாக இருப்பது போல நடித்தாலும், உண்மையான விருப்பமும் வெறுப்பும் இரண்டாவது வாரத்தில் வெளிவரத் தொடங்கியது. குறிப்பாக நித்யாவை கொச்சை மொழிகளைப் பயன்படுத்தி திட்டிய பாலாஜிக்கு குறும்படம் ஒன்றை போட்டுக் காட்டினார் கமல். அந்த அளவிற்கு அதிக கோபத்தில் வார்த்தைகளை தவறவிட்டார் பாலாஜி. இருப்பினும் இந்தக் குணம் நல்லது இல்லை என்று கமல் ஹாசன் அறிவுறுத்தியதை அடுத்து, இந்த வாரம் டோட்டலி புதிதாக மாறியிருக்கிறார் பாலாஜி. அதற்கான பிரமோ வெளியாகியுள்ளது.

தனது கோபத்தை குறைத்துக்கொண்டு, டாஸ்க்கில் ஈடுபட்டுள்ள நித்யா டையர்டு ஆகாமல் இருக்க ஜூஸ் போட்டுக் கொடுக்கிறார், உணவை ஊட்டி விடுகிறார். அதிலும் ‘இரண்டு நாட்களாக நித்யா என் கிட்ட சிரிச்சி பேசுறா, மனசுக்கே ரொம்ப சந்தோஷமா இருக்கு’ என்று பாலாஜி கூறுவதைப் பார்க்கும்போது ஆடியன்ஸ் கண்களில் டேங்க் ஓவர்ஃபிலோ ஆவது உறுதி.

×Close
×Close