Bigg Boss Tamil 2 : பிக் பாஸ் 2- ல் 94 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், ஆட்டம் சூடு பிடித்திருக்கிறது. இன்றைய டாஸ்கில் ஜனனி - ஐஸ்வர்யா மோதி கொள்கின்றனர்.
Bigg Boss Tamil 2 : ஐஸ்வர்யாவை தள்ளிவிடும் ஜனனி:
பிக் பாஸ் தமிழ் 2 நிகழ்ச்சி 100 நாட்களில் 93 நாட்களை வெற்றியுடன் கடந்து வந்துள்ளது. முதல் சீசனை போல இந்த சீசன் சுவாரசியமாக இல்ல படு போர் என்று மக்கள் பேசிக் கொண்டிருந்தாலும், இதை பார்ப்பதை மக்களை நிருத்தவில்லை.
இந்த வாரம் நடைபெற இருக்கும் எவிக்ஷனிற்கு, பிக் பாஸ் அனைத்து போட்டியாளர்களையும் தேர்வு செய்தார். இந்த எவிக்ஷனில் இருந்து தப்ப வேண்டும் என்றால், பிக் பாஸ் நடத்தும் போட்டிகளில் அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும் என்றும், குறைந்த மதிப்பெண் எடுத்தவர்கள் எவிக்ஷனுக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் ரூல்ஸ் போடப்பட்டுள்ளது.
இன்றைய புரொமோ :
September 2018
இதற்காக வாரத்தின் முதலில் இருந்தே கடுமையான போட்டிகள் வைக்கப்பட்டது. நேற்று நடைபெற்ற கட்டிக்கோ கலைச்சிக்கோ போட்டியில் அனைவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பலகைகளை கோபுரமாக அடுக்க வேண்டும். இதில் ஜனனி அடுக்கிய கோபுரம் சரிந்து கீழே விழுந்தது.
பின்னர் அதனை மீண்டும் அடுக்கி வைத்துவிட்டு, ஐஸ்வர்யாவின் அடுக்கிய பலகை கோபுரத்தை குறி வைக்கத் தொடங்கினார்கள். ஆனால் யாரும் குறி வைக்காமலே ஐஸ்வர்யா அடுக்கிய கோபுரம் கீழே விழுந்தது.
பின்பு, பஸ்ஸர் அடிக்கும் வரை போராடினார் ஐஸ், இருப்பினும் பலனில்லை. கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்க பலகையோடு வாக்குவாதம் செய்தார்.
இன்றைய புரொமோ :
September 2018
இறுதியில் பாலாஜியின் மைனஸ் பாயின்ட்ஸ் சற்று தேர்ச்சி பெற்றது இந்த கோபுரம் ரவுண்டில். இதற்கு பிறகு, 1 முதல் 5 வரை எண்கள் கொண்ட தரவரிசையில் யார் எந்த மதிப்பெண்ணில் நிற்க வேண்டும் என்று ஒருவருடன் ஒருவர் பேசி முடிவெடுக்க வேண்டும்.
அதிலும் போட்டி நிலுவ, யாஷிகா மற்றும் ஜனனி முதல் இடத்திற்கு மோதிக் கொண்டனர். முதல் இடம் கிடைக்கவில்லை என்று ஜனனி கண்கலங்கி சென்றதையும் நாம் பார்த்தோம்.
இதன் தொடர்ச்சியாக இன்றும் ஒரு சில போட்டிகள் நடைபெறுகிறது. அந்த போட்டியில் எதிர்பாராத விதமாக, விஜி கீழே விழுகிறார். அதில் அவருக்கு காயமும் ஏற்படுகிறது. இதன் புரொமோ வெளியாகியுள்ளது.
September 2018
இதையடுத்து அனைவரும் விஜியை கவனித்து கொண்டிருந்தபோது, ஐஸ்வர்யா மட்டும் அந்த போட்டியில் திருட்டு வேலை செய்கிறார். அதை கவனித்த ஜனனி கோவத்தில், “இந்த மாதிரி நேரத்தில் கூட உனக்கு விளையாடனுமா? கேட்டா ஸ்டிரேட்டஜி சொல்லுவ. போ போய் எல்லாத்தையும் எடுத்துக்கோ போ. தேவையில்லை” என்று கொந்தளித்து ஐஸ்வர்யாவை தள்ளுகிறார்.
இந்த புரொமோவை பார்த்த பிறகு, 100 நாட்களில் சுமார் 90 நாட்கள் மொக்கையாக சென்றுகொண்டிருந்த நிகழ்ச்சி இப்போதாவது சுவாரசியமாக செல்கிறதே என்று திருப்தியில் உள்ளனர் ரசிகர்கள்.