பிக் பாஸ் தமிழ் 2 நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களில் ஒருவராக உள்ளே நுழைந்தவர் மகத் ராகவேந்திரா. போட்டியின் முதல் வாரத்தில் குங்கிங் டீமில் இருக்கும்போது பார்த்த மகத்திற்கும் 4 வது வாரத்தில் பார்க்கும் மகத்திற்கும் வேறு லெவல் மாற்றத்தை அனைவராலும் உணர முடியும். குறிப்பாக இந்த வாரத்தில் சக போட்டியாளர்களுடன் மகத் நடந்துகொள்ளும் விதத்தைப் பார்த்து பொதுமக்கள் பலரும் கோவத்தில் கொந்தளித்துள்ளனர்.
கடந்த 2 வாரங்களாகப் போட்டியாளர்களுக்குள் சில மனக் கசப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் அவ்வப்போது விவாதங்களும் நடக்கிறது. இருப்பினும், சண்டைகள் நடக்கும்போது வார்த்தைகளிலும் செயல்களிலும் பலரும் கவனத்துடனே இருக்கிறார்கள். ஆனால் இந்தக் குணத்திற்கும் எனக்கும் சமந்தமே இல்லை என்பது போல நடந்துகொள்ளும் ஒரே நபர் மகத். கடந்த 2 நாட்களாக பிக் பாஸ் 2 வீட்டிற்குள் மகத் வெளிப்படுத்தும் கோவத்தால் பலரும் மனதளவில் காயப்பட்டுள்ளனர். முதலில் டீ கப் கழுவுவதில் சென்ராயனிடம் தொடங்கிய சண்டை நேற்று பாலாஜியின் அழுகை வரை நீடித்தது.
ஒவ்வொரு முறை கோவப்படும்போதும் யாராவது ஒருவரின் மனதை வார்த்தைகளால் காயப்படுத்துகிறார். இதனால் நேற்று வீட்டில் பெரிய சண்டை ஏற்பட்டது. பாலாஜியிடம் அளவுக்கு அதிகமாக கோவப்பட்ட மகத், மரியாதையற்ற வார்த்தைகளைப் பேசினார். இதனால் மனதளவில் கடும் உளைச்சலுக்கு ஆளாகிய பாலாஜி, இறுதியில் கண்ணீர் விட்டு தனிமையில் அழுதார். மகத்தின் கோவத்தால் போலீஸ் திருடன் விளையாட்டு பாதிப்படைந்துள்ளது. எனவே வீட்டின் நாட்டாமையாகப் பொறுப்பு கொடுக்கப்பட்டிருக்கும் ஜனனி, மகத்தைச் சிறைக்குள் அடைக்கிறார்.
இந்த வாரத்தின் முக்கிய டாஸ்காக திருடன் போலீஸ் விளையாட்டு கொடுக்கப்பட்டது. இதில் திருடர்கள் கும்பல் மற்றும் போலீஸ் கும்பல் இருவரும் பணம் கொடுத்து அல்லது தண்டனை பெற்றுத் தான் சாப்பிட வேண்டும். இதனால், போலீஸ் மற்றும் திருடர்கள் கும்பலில் இருந்த மொத்த 6 பேரும் பசியுடன் இருந்தனர். உணவின்றி பசியில் இருந்ததால் தான் கோவத்தில் இப்படி நடந்துகொண்டதாக மகத் கூறினார். ஆனால் இந்தக் காரணத்தை பொதுமக்கள் ஏற்க மறுக்கின்றனர். ஏனெனில் மகத் நேற்று மட்டும் கோவப்படவில்லை, தினமும் இப்படியே நடந்துகொள்கிறார் என்ற குற்றச்சாட்டு பெரிய சாட்சியாக உள்ளது.