மகத்திற்கு போட்டியாக பிக் பாஸ் தமிழ் 2 வீட்டிற்குள் தேவதைகளை சுற்றியிருக்கும் நாயகன்

Bigg Boss Tamil 2: பிக் பாஸ் தமிழ் 2 நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு சர்பிரைசாக பிக் பாஸ் முதல் சீசன் போட்டியாளர் ஒருவர் உள்ளே வருகிறார். 

Bigg Boss 2: பிக் பாஸ் தமிழ் 2 நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு சர்பிரைசாக பிக் பாஸ் முதல் சீசன் போட்டியாளர் சினேகன் உள்ளே வருகிறார்.

பிக் பாஸ் தமிழ் 2 நிகழ்ச்சி கடந்த மாதம் 17ம் தேதி தொடங்கியது. 16 போட்டியாளர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் 4 வாரத்தில் 3 பேர் வெளியேறியுள்ளனர். மமதி சாரி, அனந்த் வைத்தியாநாதன் மற்றும் நித்யா ஆகியோர் வெளியேறினார்கள். இவர்களைத் தொடர்ந்து இந்த வாரம் எவிக்‌ஷனுக்கு ரம்யா, ஜனனி, பொன்னம்பலம், பாலாஜி மற்றும் ஐஸ்வர்யா ஆகியோர் தேர்வாகியுள்ளனர்.

பிக் பாஸ் 2 நிகழ்ச்சி 4 வாரங்களுக்குப் பிறகு இப்போது தான் சூடு பிடிக்க தொடங்கியது. இந்த வாரத்தின் தலைவராக மகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். எல்லா வரமும் புதிதாக நடத்தப்படும் போட்டிகள் போலவே இன்று பள்ளிக்கூடம் டாஸ்க் நடத்தப்படுகிறது. போட்டியாளர்கள் அனைவரும் மாணவர்கள் போல நடந்துகொள்ள வேண்டும். தற்போது இருக்கும் போட்டியாளர்களில் ஒருவர் மட்டும் டீச்சராக இருக்க வேண்டும். இந்தப் போட்டியில் ஸ்பெஷலாக பாடம் நடத்தப் புதிதாக ஒரு டீச்சர் வர இருக்கிறார். அவர் வேறு யாருமில்லை, கடந்த பிக் பாஸ் சீசன் 1ல் பங்கேற்ற கவிஞர் சினேகன்.

போட்டியாளர்களுக்கு சர்பிரைஸாக உள்ளே வரும் கவிஞர் சினேகன், அனைவரிடமும் கலந்துரையாடுகிறார். பின்னர் பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் அனைவரும் உணவு அருந்தும் வேளையில் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுங்கள் என்ற கோரிக்கையும் வைக்கிறார். சினேகனின் இந்த வருகை மாற்றங்கள் எதையாவது நிகழ்த்துமா என்பதைக் காத்திருந்தே பார்க்க வேண்டும்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

×Close
×Close