/tamil-ie/media/media_files/uploads/2018/07/bigg-boss-tamil-2-ponnambalam.jpg)
bigg boss tamil 2 ponnambalam
பிக் பாஸ் தமிழ் 2 நிகழ்ச்சி தொடங்கி முதல் 3 வாரங்களில் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்துள்ளது. குறிப்பாக முதல் சீசனில் இருந்த ஆரவ் ஓவியா மருத்துவ முத்தம் சர்ச்சையை விட அதிக அளவிலான சர்ச்சையை பிக் பாஸ் தமிழ் 2 நிகழ்ச்சி சந்திக்கிறது. இதற்கு முக்கிய காரணம் இந்த சீசனில் பங்கேற்றுள்ள இளைஞர்கள் என்றும் கூறலாம்.
பிக் பாஸ் தமிழ் 2 நிகழ்ச்சியில் முதல் விதிமுறையே “நீங்கள் நீங்களாக இருக்க வேண்டும்” என்பது தான். அதற்கு அர்த்தம் ஒருவர் தனது குணத்திற்கு ஏற்றது போல இருக்க வேண்டும் என்பதே தவிர அவர் அவருக்கு தோன்றியது போல இருப்பது இல்லை. பிக் பாஸ் 2 இல்லத்தில் வாழும் 100 நாட்களிலும் ஒழுங்குமுறையுடன் வாழ வேண்டும் என்பதும் முக்கிய விதிமுறைகளில் ஒன்று. ஆனால் ஒழுக்கம் என்ற வாழ்க்கைக்கு எதிர்மாறாக வாழ்ந்து வருகின்றனர் ஒரு சில போட்டியாளர்கள்.
குறிப்பாக பொதுமக்கள் அனைவரும் வெறுக்கும் வகையில் நடந்துக்கொள்கின்றனர் யாஷிகா மற்றும் மகத். குழந்தைகள் கூட பார்க்கும் இந்த நிகழ்ச்சியில், ஒரே படுக்கையில் மகத், யாஷிகா மற்றும் ஐஸ்வர்யா படுத்துகொண்டு அசவுகரியமாக நடந்துக்கொள்வதும், யாஷ்காவிடம் முகம் சுலிக்கும் அளவிற்கு மகத் செய்யும் சில்மிஷங்கள், ஜனனி எனக்கு நல்ல தோழி என்று கூறிவிட்டு, தோழியின் பின் புறத்தை பார்த்துவிட்டு செய்கையினால் சாடுவது போன்ற கொச்சை செயல்களில் மகத் ஈடுபடுவதை நாம் தினமும் பார்க்கிறோம். நிகழ்ச்சியை இன்னும் சுவாரசியம் ஆக்குகிறோம் என்ற திட்டத்தில் மகத் மற்றும் யாஷிகா இருவரும் ‘ச்சி’ என்று சொல்லும் அளவிற்கு நடந்துக்கொள்வது தான் உண்மை. பெண்கள் அவர்கள் விருப்பம் போல இருப்பது தவறா என்று நீங்கள் கேட்கலாம் ஆனால் கோடிக் கணக்கான மக்கள் பார்க்கும் நிகழ்ச்சியில் இவ்வாறு நடந்துகொண்டால் இதனை ஆபாசம் என்று கூறாமல் வேறு எப்படி கூறுவது.
இது குறித்து பொன்னம்பலம் பல முறை மறைமுகமாகவும் வெளிப்படையாகவும் கூறியிருக்கிறார். இருப்பினும் மகத் போன்ற போட்டியாளர்கள் பெண் போட்டியாளர்களிடம் நடந்துக்கொள்ளும் முறையில் தவறான விஷயங்கள் நாம் பலவற்றை நாம் தினமும் நிகழ்ச்சியில் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம்.
சென்ற வாரத்தின் இறுதியில் நடந்து முடிந்த எவிக்ஷனில் அனந்த் வைத்தியநாதன் வெளியேற்றப்பட்டார். அப்போது ஒருவரை சிறைக்கு அனுப்பும் சக்தியும் அவருக்கு அளிக்கப்பட்டது. எந்த வித தயக்கமும் இல்லாமல் பொன்னம்பலத்தை தேர்வு செய்தார் அனந்த். அதற்கு காரணம் மகத், யாஷிகா போன்ற போட்டியாளர்கள் நடந்துக்கொள்ளும் முறையை அவர் சுட்டிக்காட்டியது.
July 2018#பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil - தினமும் இரவு 9 மணிக்கு உங்கள் விஜயில்.. #VivoBiggBoss@Vivo_Indiapic.twitter.com/gLDueAOE7G
— Vijay Television (@vijaytelevision)
#பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil - தினமும் இரவு 9 மணிக்கு உங்கள் விஜயில்.. #VivoBiggBoss@Vivo_Indiapic.twitter.com/gLDueAOE7G
— Vijay Television (@vijaytelevision) July 9, 2018
ஆனால் யாரும் சற்றும் எதிர்பாராத வகையில் பொன்னம்பலத்திற்கு ஆதரவு குரல் கொடுத்தார் கமல் ஹாசன். இதனை தொடர்ந்து, பொன்னம்பலம் சிறைக்கு செல்வதை யாஷிகா, ஐஸ்வர்யா மற்றும் சில போட்டியாளர்கள் தவிர பிற போட்டியாளர்கள் எதிர்க்கின்றனர். இதற்கான பிரமோ இன்று வெளியாகியுள்ளது.
July 2018பொன்னம்பலத்திற்கு வழங்கப்பட்டிருக்கும் தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் #பிக்பாஸ் குடும்பத்தினர்! ???????? #BiggBossTamil - தினமும் இரவு 9 மணிக்கு உங்கள் விஜயில்.. #VivoBiggBoss@Vivo_Indiapic.twitter.com/92tTOcTkiL
— Vijay Television (@vijaytelevision)
பொன்னம்பலத்திற்கு வழங்கப்பட்டிருக்கும் தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் #பிக்பாஸ் குடும்பத்தினர்! ???????? #BiggBossTamil - தினமும் இரவு 9 மணிக்கு உங்கள் விஜயில்.. #VivoBiggBoss@Vivo_Indiapic.twitter.com/92tTOcTkiL
— Vijay Television (@vijaytelevision) July 9, 2018
மேலும் யாஷிகா, ஐஸ்வர்யா மற்றும் மகத் ஆகிய 3 பேரையும் கன்ஃபெஷன் ரூமுக்கு அழைத்து கண்டிக்கிறார் பிக் பாஸ்.
July 2018இவங்கள்ல யாரு இந்த வார Eviction க்கு nominate ஆவாங்க?! ???????? #பிக்பாஸ் - தினமும் இரவு 9 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil#VivoBiggBoss@Vivo_Indiapic.twitter.com/xINGv1198G
— Vijay Television (@vijaytelevision)
இவங்கள்ல யாரு இந்த வார Eviction க்கு nominate ஆவாங்க?! ???????? #பிக்பாஸ் - தினமும் இரவு 9 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil#VivoBiggBoss@Vivo_Indiapic.twitter.com/xINGv1198G
— Vijay Television (@vijaytelevision) July 9, 2018
பிக் பாஸ் தமிழ் 2 நிகழ்ச்சி தமிழ்நாடு முழுவதும் புகழ்பெற்றதால், அதனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பார்க்கின்றனர். இத்தகைய நிகழ்ச்சியில் ஒழுக்கமற்று நடந்துக்கொள்ளும் போட்டியாளர்களை இன்னும் வைத்துக்கொள்வது சரியில்லை என்பதே பலரின் கருத்து.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.