Bigg Boss Tamil 2: பிக் பாஸ் தமிழ் 2 நிகழ்ச்சியில் இருந்து கடந்த வாரம் ரம்யா வெளியேற்றப்பட்டர். இதனைத் தொடர்ந்து அவர் சமீபத்தில் வீடியோ ஒன்றைப் பதிவு செய்துள்ளார்.
பிக் பாஸ் தமிழ் 2 நிகழ்ச்சியில் 4 வாரத்தில் நடந்த எவிக்ஷன்:
பிக் பாஸ் தமிழ் 2 நிகழ்ச்சி கடந்த மாதம் 17ம் தேதி தொடங்கியது. இந்த நிகழ்ச்சி தொடங்கிய 5 வாரங்களில் இதுவரை 4 போட்டியாளர்கள் வீட்டை விட்டு வெளியே அனுப்பப்பட்டனர். 2வது வாரத்தில் முதலில் வெளியேறினார் மமதி சாரி. இவர்களைத் தொடர்ந்து அனந்த் வைத்தியநாதன், நித்யா ஆகியோரும் அடுத்தடுத்து வெளியேற்றம் செய்தனர். கடந்த வாரம் நடைபெற்ற எவிக்ஷன் பிராசஸில் பாடகி ரம்யா எவிக்ட் ஆனார். நித்யா எவிக்ஷன் போலவே ரம்யாவின் எவிக்ஷனும் பிக் பாஸ் 2 பார்வையாளர்களுக்குப் பெரியா ஷாக் கொடுத்தது. எந்தத் தவறும் செய்யாமல், தானாகவே இருந்து, அனைத்து உணர்வுகளையும் ஒளிவு மறைவின்றி வெளிப்படையாகக் காட்டிய ரம்யா ஏன் எவிக்ட் செய்யப்பட்டார் என்று புரியாமல் இருக்கிறார்கள் ரசிகர்கள். பலரும் பிக் பாஸ் தமிழ் 2 நிகழ்ச்சியில் பொதுமக்களின் வாக்குகள் பொய்யாக்கப்படுவதாக குற்றம் சாட்டினர்.
பிக் பாஸ் 2 எவிக்ஷனுக்கு பிறகு ரம்யா வெளியிட்ட வீடியோ:
இதனைத் தொடர்ந்து ரம்யா தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றைப் பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில், “எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கு நன்றி. பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும்வரை எனக்கு இவ்வளவு பெரிய ஆதரவு இருக்கிறது என்று தெரியாது. நான் நானாக இருக்க வேண்டும் என்று தான் நினைத்தேன். யாரைப் பற்றி புறம் பேசாமல், யாரையும் காயப்படுத்தக் கூடாது என்று இருந்தேன். சில நேரங்களில் கோவப்பட்டிருக்கேன். எனக்குச் சரி என்றும் நியாயமாகவும் தோன்றிய விஷயங்களுக்காக மட்டுமே கோவப்பட்டேன். ஏனென்றால் அந்த வீட்டில் எல்லா நேரமும் சண்டை மட்டுமே நடக்கும். நீங்கள் பார்ப்பது வெறும் 1 மணி நேரம் தான். ஆனால் நாங்கள் அதை 24 மணி நேரமும் பார்க்கிறோம். எனக்கு அது ரொம்ப கஷ்டமாக இருந்தது. இன்னும் கொஞ்ச நாள் கடந்திருந்தால், என்னால் தாக்குப் பிடித்திருக்க முடியாது. அதனால் அந்த ஷோவை விட்டு வெளியேறியது எனக்கு மகிழ்ச்சி தான். நீங்கள் யாரும் நான் எவிக்ட் ஆனதுக்கு வருத்தமோ கோவமோ அடைய வேண்டாம். சந்தோஷப்படுங்கள். உங்கள் அனைவரின் ஆதரவிற்கும் மீண்டும் நன்றி.” என்று பேசியுள்ளார்.
Thank you so much everybody for all the love and support. I am completely overwhelmed. Love you all! ❤ pic.twitter.com/0GWBPqGiFp
— Ramya NSK (@SingerRamya) 23 July 2018
இந்த வீடியோவை பார்த்த பலரும் ரம்யாவுக்கு அளித்து வரும் ஆதரவை அதிகரித்துள்ளனர். நித்யா மற்றும் ரம்யா எவிக்ஷன்களில் அந்தத் தனியார் தொலைக்காட்சி முறையாக நடந்துகொள்ளவில்லை என்றும், பொதுமக்கள் அளித்த வாக்கைப் பயன்படுத்தி இந்த எவிக்ஷன் நடக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.