Bigg Boss Tamil 3 Episode 56: பிக்பாஸ் நிகழ்ச்சி வார இறுதிகளில் இன்னும் களைகட்டும். காரணம் போட்டியாளர்களை அகம் டிவி வழியே நடிகர் கமல்ஹாசன் சந்திப்பார். இதில், அந்த வாரத்தின் முக்கியமான விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும்.
வைல்டு கார்டில் போட்டியாளரான வனிதா: சேரனை நாமினேட் செய்த லாஸ்லியா
அந்த வகையில் இந்த வார இறுதியில் சனிக்கிழமை மதுமிதா வெளியேறினார். இதைத்தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமையான நேற்றைய எபிசோடில் சேரனுக்கும் லாஸ்லியாவுக்கும் இடையே ஏற்பட்டுள்ள விரிசலை முதல் விவாதப்பொருளாக எடுத்தார் கமல். அப்போது பேசிய சேரன், லாஸ்லியா மீது எப்போதுமே அன்பு இருக்கும் என்றும், நண்பர்களோடு இருக்கும்போது அப்பா தேவையில்லை என்று ஒதுங்கி இருப்பதாகவும் தெரிவித்தார். அவரைத் தொடர்ந்து பேசிய லாஸ்லியா, பிக்பாஸ் டாஸ்க்குகளில் தான் சரியாக விளையாடாததாக காரணம் காட்டி இரண்டு முறை சிறைக்கு அனுப்பப்பட்ட போது, சேரன் தனக்கு ஆதரவாக இல்லை எனவும் மாறாக தனக்கு எதிராக நின்றதாகவும் தெரிவித்தார். இதைக் கேட்ட கமல், சேரனின் அறிவுரையால் தான் இந்த நிகழ்ச்சியில் உங்களுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது என்று லாஸ்லியாவிடம் கூறினார்.
அம்மாடியோவ் ; குருதிப்புனல்ல கமல் நடத்துன விசாரணையை விட பயங்கரமா இருக்கே….
பின்னர் கற்பூர பாய்ஸிடம் பார்வையை திருப்பினார் கமல். இதற்கிடையே, வத்திக்குச்சி வனிதாவிடம் பேச வேண்டும் என கமல் குறிப்பிட்டதும் வனிதாவின் முகம் சுருங்கியது. கமலுடன் இணைந்து கஸ்தூரியும் வனிதாவை கலாய்த்தார்.
இதனால் மீண்டும் ஒரு பிரளயம் வெடிக்கும் என்று நினைத்தால், மாறாக வனிதாவை புகழ்ந்து தள்ளினார் கஸ்தூரி. தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மதுமிதா வெளியேறிவிட்ட காரணத்தினால், பிக்பாஸ் வீட்டின் புதிய தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என்றார் கமல். அந்த டாஸ்க்கில் மதுமிதாவிற்குப் பிறகு அடுத்தடுத்த இடங்களை ஷெரீன் மற்றும் தர்ஷன் பிடித்திருந்தனர்.
இவர்களில் யாருக்கு அதிக ஆதரவு என்று கேட்ட போது, தர்ஷன் உட்பட அனைத்து போட்டியாளர்களும் ஷெரீன் பெயரை முன்மொழிந்தனர். இதனால் பிக்பாஸ் வீட்டின் தலைவரானார் ஷெரீன்.
இவற்றைத் தொடர்ந்து எலிமினேஷன் ப்ராசஸ் தொடங்கியது. எப்போதும் போல, போட்டியாளர்களை சிறிது நேரம் கலங்கடித்து விட்டு, கவின் மற்றும் லாஸ்லியா காப்பாற்றப்பட்டதாக அறிவித்தார் கமல். பின்னர் முகினும், அபிராமியும் ஒன்றாக அமர வைக்கப்பட்டு, வெளியேறுவது யார் என்ற எதிர்பார்ப்பை போட்டியாளர்களிடையே அதிகப்படுத்தினார். பிறகு அபிராமி எலிமினேட் செய்யப்படுவதாக அறிவித்தார் கமல். தனது தோழியின் வெளியேற்றத்தால் கதறி அழுதார் லாஸ்லியா.
ஆனால் எப்போதும் அழுது கொண்டிருந்த அபிராமி, தான் வெளியேற்றுப் படுவதில் மகிழ்ச்சி என்ற பாவனையையே வெளிக்காட்டினார். அனைவரும் அவருக்கு நம்பிக்கையான வார்த்தைகளைக் கூறினர். அபிராமி அனைவரிடமும் விடை பெற்று வெளியேறிய பிறகு, அவர் உடைத்த பதக்கத்தை ஒட்ட முயன்றார் முகென்.
பின்னர் கமலை சந்தித்த அபிராமி, அகம் டிவி வழியே போட்டியாளர்களுடன் நன்றாக சிரித்து பேசினார். அபிராமியை ஸ்வரம் பாட வைத்து, வெளியே அனுப்பி வைத்தார் கமல். இனிவரும் காலம் மிகவும் கடுமையாக இருக்கும் எனக் கமல் கூறியதுடன் நிகழ்ச்சி முடிவடைந்தது!