அஜித் சார் எனக்குக் கொடுத்த அட்வைஸ் இது தான் - மனம் திறக்கும் அபிராமி

படத்தின் போஸ்டர் வெளியானதும், அஜித் சார் என்னை அழைத்து, ‘ரொம்ப பறக்காத, சரியா’ என்றார்.

எஸ். சுபகீர்த்தனா

Abhirami Venkatachalam: ’நேர்க்கொண்ட பார்வை’ படம் வெளியாகும் போது, அபிராமி வெங்கடாச்சலம் பிக் பாஸ் தமிழ் 3 நிகழ்ச்சியில் இருந்தார். “அதன் வரவேற்பைப் பற்றி எனக்கு எந்த ஐடியாவும் இல்லை, ஆனால் நான் ஒரு பெரிய படத்தில் ஓர் அங்கம் வகித்திருக்கிறேன் என்பது மட்டும் எனக்கு நன்றாக தெரியும்” எனப் பேசத் தொடங்குகிறார்.

நிகழ்ச்சியிலிருந்து அவர் வெளியேறி சில வாரங்கள் ஆகிவிட்டன. இந்த உரையாடலை நாங்கள் ஆரம்பித்தபோது அபிராமி மிகவும் அமைதியாக பேசினார். ”நான் தங்கியிருந்த காலம் முழுவதும், எனக்கு உண்மையாக இருந்தேன், அது மிக முக்கியமானது” என்றுக் கூறி சிரிக்கிறார். அபிராமியின் நோக்கம் பிக்பாஸ் டைட்டிலை ஜெயிக்க வேண்டும் என்பதில் இல்லை.  “எல்லாரும் சொல்வது போல் இந்த பயணம் முக்கியமானது” என தத்துவமாக பதிலளிக்கிறார்.

”மக்களின் அன்பைப் பெறுவதற்காகவே நான் உள்ளே சென்றேன்.  அவர்களின் வார்த்தைகள் மற்றும் பாஸிட்டிவிட்டி ஆகியவற்றால் நான் அகம் மகிழ்ந்தேன். உண்மையைச் சொன்னால், ரேஷ்மா வெளியேற்றப்பட்டபோதே, நான் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற விரும்பினேன். என்னை வீட்டிற்கு அனுப்புமாறு கமல் சாரிடம் கேட்டுக் கொண்டிருந்தேன். நான் விளையாட்டின் கவனத்தை இழக்கிறேன் என்று அப்போதே உணர்ந்தேன். அதனால் தான் நான் வெளியேறும்போது நான் அழவில்லை” என்றார்.

தான் வெளியேற்றப்பட்ட நாளில் என்ன நடந்தது என்பதை அபிராமி வெங்கடச்சலம் நினைவுக்கூறுகிறார். ”என்னைக் கட்டிப்பிடிக்க சொல்லி, மக்கள் தங்கள் குழந்தைகளை அனுப்பியது மகிழ்ச்சியாக இருந்தது. நான் வீட்டிற்கு வந்து, என் சகோதரனின் தொலைபேசியை செக் செய்தேன். அடுத்த நாள் காலை, எல்லாமே மாறின. எனது சமூக ஊடக பக்கங்கள் வாழ்த்துச் செய்திகளால் நிரம்பி வழிகின்றன. இன்றும், நான் இந்த ஃபேன் பாஜ்களின் அட்மின்களுடன் பேசினேன். என்னால் முடிந்த போதெல்லாம் ‘லைவ்’ வர முயற்சிக்கிறேன். சுற்றி 60 கேமராக்கள் இருந்தபோதிலும், நான் ஒருபோதும் என்னை வெளிக்காட்டுவதில், பொய்யை செலுத்தவில்லை.”

முகெனுடனான நட்பு?

”என்ன சொன்னாலும் செய்தாலும் நாங்கள் நல்ல நண்பர்கள். இனிமேலும் அப்படித்தான் இருப்போம். அவருக்காக நான் இருக்கிறேன். ஆனால் அவர் உண்மையிலேயே என்ன ஃபீல் பண்ணுகிறார் என்பதை நான் அறிய விரும்புகிறேன். ஆனால், முடிவு அவருடையதாக இருக்கட்டும். முகென் ஆர்வமில்லாத ஒரு விஷயத்தில், நான் அவரை கட்டாயப்படுத்தியதாக மக்கள் நினைத்திருக்கிறார்கள் அது முற்றிலும் தவறு.

மாடல் – பரதநாட்டியம் கலைஞரான அபிராமிக்கு நடந்தது பற்றி எந்த வருத்தமும் இல்லை. “நான் நேர்க்கொண்ட பார்வையின் வெற்றியைக் கொண்டாட சரியான நேரத்தில் வீட்டிற்கு வந்தேன். அந்தப் படம் என் மூச்சு இருக்கும் வரை என்னுடன் பயணிக்கும்” என்கிறார் அவர்.

அஜித்துடனான தனது நினைவுகளைப் பகிர்ந்துக் கொண்ட அபிராமி, “படத்தின் போஸ்டர் வெளியானதும், அஜித் சார் என்னை அழைத்து, ‘ரொம்ப பறக்காத, சரியா’ என்றார். ஆனால் நான் எனது எக்ஸைட்மெண்டுகளை வெளிக்காட்டியதும் அவர் புரிந்து கொண்டார். அவரது வாழ்க்கையில் ஒரே இரவில் விஷயங்கள் எவ்வாறு மாறின, என்பதற்கான ஒரு கதையை அவர் சொன்னார். கடவுளையும், கடின உழைப்பையும் நம்புபவர் அவர்” என்று சிரிக்கிறார் அபிராமி.

ஆங்கிலத்தில் படிக்க – Nerkonda Paarvai happened when I was struggling for a breakthrough: Abhirami Venkatachalam

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close