'கவின் ஒர்த் இல்ல... ஃபிராடு லோஸ்லியா' - முதல் நாளே முட்டி தேய விட்ட வனிதா!

Bigg Boss Tamil 3, Episode 50 Written Update: கவினை பார்த்து 'ஒர்த் இல்லப்பா.. ஒர்த்தே இல்ல' என்று சொன்ன போது கவின் டோட்டல்...

Bigg Boss Tamil 3 Episode 50: பிக்பாஸ் சீசன் 3ல் நேற்று(ஆக.12) பெரும்பாலான ரசிகர்கள் ஏக குஷியில் இருந்தார்கள் என்றால் மிகையல்ல. எந்த வனிதாவை திட்டித் தீர்த்து, மக்கள் வெளியே அனுப்பினார்களோ, அதே வனிதா நேற்று மீண்டும் பிக்பாஸ் வந்த போது தா இந்த பீலிங்ஸ்… பின்னே, வம்பு, கம்பு, அம்பு என்று சண்டை சமாச்சாரங்களை கொண்டு நடப்பு பிக்பாஸ் சீசனின் தொடக்க வாரங்களில் மற்ற போட்டியாளர்களை ஆட்டுவித்தவர் வனிதா. யாராக இருந்தாலும் ‘என்ன இப்ப?’ மோடில் கடித்து குதறிய வனிதா, ஸில் வாரங்களுக்கு முன் வெளியேற்றப்பட்டார்.

மேலும் படிக்க – வந்தார்… கதைத்தார்… முடித்தார்! முகேன் – அபி காதலுக்கு ஒரே மாலையில் ‘மாலை’ போட்ட வனிதா

ஆனால், அதன் பிறகு லோஸ்லியா – கவின் – சாக்ஷி முக்கோண காதல் மற்றும் முகென் – அபிராமி ஒன்சைட் காதல், சேரன் மீது மீரா மிதுன் அளித்த புகார் என்று அரங்கேறிய சம்பவங்கள் பல. இதற்கிடையில், கஸ்தூரி பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுக்க, கேள்விக் கேட்கிறேன் என்ற பெயரில் மொக்கை செயல்களை செய்துக் கொண்டிருந்தார். ஆடியன்ஸோ பெரிய அளவில் இம்ப்ரெஸ் ஆகவில்லை. இதனால், வனிதாவை மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் களமிறக்கினார் பிக்பாஸ். போட்டியாளராக அல்ல, சிறப்பு விருந்தினராக.

இதற்காக, வீட்டை ஹோட்டலாக மாற்ற உத்தரவிட்ட பிக்பாஸ், சேரனை மேனேஜராக்கி மற்றவர்களுக்கு வெவ்வேறு பணிகளையும் ஒதுக்கி பணித்தார். ஹோட்டலில் உள்ள அனைவரும் வனிதா மனம் நோகாமல் நன்கு உபசரிக்க வேண்டுமாம். இறுதியில், வனிதா பரிந்துரையின் அடிப்படையில், இந்த வார Luxury பட்ஜெட் ஒதுக்கப்படும் என பிக்பாஸ் அறிவிக்க, ஹோட்டல் செட்டப்புக்கு மாறியது இல்லம்.

வீட்டிற்குள் இரண்டாவது முறையாக இடது கால் எடுத்து வைத்த வனிதா, ஆரம்பத்திலேயே தனது அதிரடியை துவக்கினார். போட்டியாளர்கள் அனைவரையும் உட்கார வைத்து, கிட்டத்தட்ட 20 நிமிடங்களுக்கு கதற விட்டார் பாருங்க. உண்மையில், சூப்பர்ப்!.

‘நீ என்ன சிக்ஸ் பேக் காட்டத் தான் பிக்பாஸ் வந்தியா?’-னு பிக்பாஸ் நேயர்களின் ஹீரோவான தர்ஷனை தாக்கிய வனிதா, ‘நீங்க-லாம் எதுக்கு இந்த வீட்டுக்கு வந்திருக்கீங்க?-னே தெரியல… தர்ஷன் தான் ஜெயிப்பார் என்று நீங்களே புரமோட் செய்கிறீர்கள். அப்புறம் நீங்க எதுக்கு இங்க வந்தீங்க?. நான் கமல் சார் கிட்ட ஸ்பெஷல் பெர்மிஷன் வாங்கி கதவைத் திறந்து விட சொல்றேன்… எனக்கு மகளை ஜெயிக்க விருப்பம் இல்லை-னு சொல்றவங்க, அப்பாவை ஜெயிக்க விருப்பம் இல்லை-னு சொல்றவங்க, நண்பனுக்கு விட்டுக் கொடுக்குறவங்க, காதலனுக்காக விட்டுக் கொடுக்குறவங்க-னு நினைப்பவர்கள் வீட்டை விட்டு வெளியே போயிட்டே இருக்கலாம் என ஒரு போடு போட்டார் பாருங்க, போட்டியாளர்கள் முகத்தில் ஈயாடவில்லை.

லோஸ்லியாவை நோக்கி, ‘இந்த முகத்தை பார்த்து ஏமாந்துவிடாதீர்கள், ஃபிராடு.. உன்ட்ட அப்புறம் பேசுறேன்’ என்று போடுபோட்ட வனிதா கஸ்தூரியையும் விட்டுவிக்கவில்லை. அவரிடம், ‘உங்களை எதுக்கு அனுப்புனாங்க? தர்ஷனையும், ஷெரினையும் மாலை மாத்திக்க சொல்லவா?’ என்று அலறவிட, என்னடா இது நமக்கு வந்த சோதனை என கஸ்தூரி பம்மிக் கொண்டார்.

குறிப்பாக, முகேனையும், கவினையும் காதல் விவகாரங்களில் வெளுத்து வாங்கிய வனிதா, கவினை பார்த்து ‘ஒர்த் இல்லப்பா.. ஒர்த்தே இல்ல’ என்று சொன்ன போது கவின் டோட்டல் சுவிட்ச் ஆஃப்!

இந்த வாரம் செம தீனி காத்திருக்கு!

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close