வனிதா கோடு போட, மதுமிதா ரோடே போட்டுவிட்டார்! – நாளுக்கு நாள் அதிகரிக்கும் பிக்பாஸ் ரணகளம்

Bigg Boss Tamil 3, Episode 52 Written Update: இடையில் லோஸ்லியாவுக்கும், மதுமிதாவுக்கும் வாக்குவாதம் உருவானது. ஒருக்கட்டத்தில் வனிதாவே முயன்றும், மதுமிதாவை சமாதானம் செய்ய முடியவில்லை

By: August 15, 2019, 11:42:09 AM

Bigg Boss Tamil 3 Episode 52: பிக்பாஸ் வீட்டில் இந்த வார லக்ஸுரி பட்ஜெட் டாஸ்க் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, போட்டியில் சிறப்பாக பங்கெடுத்தவர்கள் மற்றும் சொதப்பியவர்களை தேர்வு செய்யும் நடைமுறை தொடங்கியது. மதுமிதா, தர்ஷன், ஷெரீன் ஆகியோர் சிறப்பாக டாஸ்க்கில் ஈடுபட்டதாக தேர்வு செய்யப்பட, கஸ்தூரியும் அபிராமியும் தங்களுக்கான போட்டிகளை சரியாக செய்யவில்லை என்றும் அதிகளவில் ஆங்கிலம் பேசினார்கள் என காரணம் கூறப்பட்டன.

இதனால், கஸ்தூரியும் அபிராமியும் சிறைக்கு அனுப்பப்பட்டனர். அடுத்த வாரம் நடைபெறும் தலைவர் போட்டிக்காக மதுமிதா, தர்ஷன் மற்றும் ஷெரீன் ஆகியோர் போட்டியிடலாம் என அறிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, ஆங்கிலம் அதிகம் பேசுகிறார் என அபிராமியை ஜெயிலுக்கு அனுப்பியது தனக்கு பிடிக்கவில்லை என்று சேரனிடம் அதிருப்தியை வெளிப்படுத்தினார் மதுமிதா. சேரனோ, தன்னால் இதுவரை பிக்பாஸ் வீட்டில் தலைவராக முடியவில்லை என்று ஆதங்கத்தை தெரிவித்தார்.

இதே விவகாரம் பற்றி கவினும் மதுமிதாவும் பேசிக் கொண்டிருந்த போது, தர்ஷன் கவினை உள்ளே கூட்டிச் சென்றார். தன்னை அவமதித்து கவினை தர்ஷன் உள்ளே கூட்டிச் சென்றார் என பிரச்னையை கிளப்பினார். மதுமிதா.

பிக்பாஸ் வீட்டில் தொடர்ந்து ஆணதிக்கம் தலை தூக்குவதாகவும், பெண்கள் இங்கு அடிமைப்படுத்தப்படுகின்றனர் என்றும் சண்டையை இழுத்தார். அப்போது சாண்டி, தர்ஷன், கவின் ஆகியோருடன் அவருக்கு பிரச்னை உருவானது.

பெண்களை வைத்து விளையாடி வெற்றிப் பெறுவதற்காக இந்நிகழ்ச்சிக்குள் வரவில்லை. கமல்ஹாசன் ஒருவேளை பிக்பாஸ் வீட்டு கதவை திறந்தால் வெளியேறும் முதல் ஆளாக நானிருப்பேன் என்றார் மதுமிதா. இடையில் லோஸ்லியாவுக்கும், மதுமிதாவுக்கும் வாக்குவாதம் உருவானது. ஒருக்கட்டத்தில் வனிதாவே முயன்றும், மதுமிதாவை சமாதானம் செய்ய முடியவில்லை.

இறுதியில், தர்ஷனை தவறாக சித்தரித்து சேரனிடம் வனிதா பேசிக் கொண்டிருப்பதோடு நேற்றைய நிகழ்ச்சி முடிந்தது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Bigg boss tamil 3 august 14 2019 episode 52 written update

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X