/tamil-ie/media/media_files/uploads/2019/06/Ner-Konda-Paarvai-Trailer-Ajith-kumar-movie.jpg)
Tamil Nadu news today in tamil,
Thala 60: நடிகர் அஜித்தின் 'நேர்க்கொண்ட பார்வை' படத்துடன் மேலும் புதிய படங்கள் வெளியான போதிலும், விமர்சனம் மற்றும் வணிகரீதியாக மாபெரும் வெற்றியைக் கொடுத்திருக்கிறார் அஜித். அதோடு தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸில் முதலிடத்தையும் பிடித்துள்ளது நேர்க்கொண்ட பார்வை.
இந்த வெற்றியைத் தொடர்ந்து இம்மாத இறுதியில் 'தல 60' படப்பிடிப்பைத் தொடங்கவுள்ளார் அஜித். இதையும் இயக்குநர் ஹெச்.வினோத் இயக்க, போனி கபூரே தயாரிக்கிறார்.
/tamil-ie/media/media_files/uploads/2019/08/Reshma-Pasupuleti.jpg)
ஸ்ரீதேவி - போனி கபூரின் மூத்த மகள் ஜான்வி கபூர் 'தல 60' படத்தில் முக்கிய வேடத்தில் நடிப்பது, ஏறக்குறைய உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது இந்தப் படத்தைப் பற்றிய மற்றொரு சுவாரஸ்ய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அது என்னவென்றால், 'பிக் பாஸ் தமிழ் 3' நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட ரேஷ்மா இந்த படத்தில் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. இயக்குநர் எழில் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்திருந்த 'வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்' படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார் ரேஷ்மா.
பிக்பாஸ் ரியாலிட்டி ஷோவில் கலந்துக் கொண்ட அவர் முதல் நாமினேஷனிலேயே வெளியேற்றப்பட்டது ஆச்சர்யமாக இருந்தது. மற்றவர்களை ஒப்பிடுகையில் பெரிதாக வில்லத்தனம் செய்யாத ரேஷ்மாவை ரசிகர்களுக்கு பிடித்திருக்கிறது என்பதே நிஜம். எது எப்படியோ ‘தல 60’ படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.