எஸ்.சுபகீர்த்தனா, அந்தரா சக்கரவர்த்தி
Bigg Boss Tamil 3 Kasthuri Shankar: சர்ச்சைகளுக்குப் பெயர் போன நடிகை கஸ்தூரி ஷங்கருடன் உரையாடலைத் தொடங்குவது எளிதானது, ஏனென்றால் நீங்கள் அவரிடம் ஒரு கேள்வியைக் கேட்டால், அதற்கு அவர் ஒரு நீண்ட பதிலைத் தருவார். ”நிகழ்ச்சியில் நான் ஏன் ‘நானாக’ இல்லை என்று அனைவரும் என்னிடம் கேட்டு சோர்வடைய செய்கிறார்கள். ஆனால் பார்வையாளர்கள் பார்த்ததை விட அங்கு அதிகமாக இருந்தது” என்று பேசத் தொடங்குகிறார்.
வீட்டில் தங்கியதை எவ்வாறு தொகுப்பீர்கள்?
உங்களில் எத்தனை பேருக்கு என்னை உண்மையிலேயே தெரியும்? நீங்கள் என்னை மேடையில், பொது மற்றும் சமூக ஊடகங்களில் மட்டுமே பார்த்திருக்கிறீர்கள். எனது பொதுக் கருத்துக்கள் வெளியாவது இங்குதான். ஆனால் கஸ்தூரி (வீட்டில்) சண்டை போடுவதில்லை, கோபப்படுவதில்லை அல்லது மனக்கசப்பைப் பெறுவதில்லை. நிஜ வாழ்க்கையில் அவள் இப்படித்தான் இருக்கிறாள். அபிராமி நியாயமற்ற முறையில் சிறைக்கு அனுப்பப்பட்டபோது, சாண்டி மற்றும் கவின் ஆகியோருடன் நான் சண்டை போட்டேன். அதில் ஒரு சிறிய பகுதி தான் நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்பட்டுள்ளது. நான் மதுமிதாவுக்காகவும் பேசினேன். அவளுடைய செயலுக்கு நான் துணை நிற்கிறேனா இல்லையா என்பதை விட, அவளுடைய கருத்துச் சுதந்திரத்திற்காக நான் பேசினேன். தொலைக்காட்சி கண்டெண்டிற்காக மலிவான முறையில் நான் வனிதாவுடன் சண்டையிடவில்லை.
பிக் பாஸ் தமிழ் 3-ல் ஏன் கலந்துக் கொண்டீர்கள்? இதற்கு முன் இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள விரும்பவில்லை என்று கூறியிருந்தீர்களே...
பிக் பாஸ் ஒரு நல்ல நிகழ்ச்சி என்று நான் திடீரென்று முடிவு செய்யவில்லை. என்னால் மறுக்க முடியாத ஒரு வாய்ப்பை அவர்கள் எனக்கு வழங்கினார்கள். ஒரு கட்டத்தில், நீங்கள் சம்பளத்துடன் முட்டாளாக இருக்கிறீர்களா, அல்லது சம்பளம் இல்லாமல் முட்டாளாக இருக்கிறீர்களா என்பதை தீர்மானிக்கும் சூழல் பெரும்பாலானோருக்கு ஏற்படுவது சகஜமே.
சீக்ரெட் ரூம் வேண்டாம் என்று வெளியேறினீர்களே?
போட்டியை தொடர வேண்டும் என்பதற்கான புள்ளியை நான் கண்டுபிடிக்கவில்லை. பிக் பாஸின் வரலாற்றிலேயே, போட்டியில் தொடர ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டும், வீட்டை விட்டு வெளியேறிய முதல் போட்டியாளர் நான் தான்.
வனிதாவின் ரீ-எண்ட்ரி?
இதைப் பற்றி பிக் பாஸின் நியாயம் என்ன என்பதைக் கேட்கிறோம்? பொழுதுபோக்கை பொழுதுபோக்காகப் பார்ப்பது முக்கியம். மக்களின் வாக்குகள் எவ்வாறு கையாளப்படுகின்றன என்பதற்கான பிரதிபலிப்பு தான் இது.
யார் ’வின்’ பண்ண வேண்டுமென நினைக்கிறீர்கள்? ஏன்?
சேரன் ஜெயிக்க வேண்டுமென நினைக்கிறேன். அவர் மிக புத்திசாலித்தனத்துடன் ஒவ்வொருவரையும் அணுகுகிறார். அதோடு, கேமையும் நன்றாகவே விளையாடுகிறார்.
நீங்கள் விளையாடினீர்களா?
இல்லை நான் விளையாடவில்லை. ஒருபோதும் விளையாடவும் மாட்டேன்.
ஃபேஸ் வேல்யூவிற்காக பிக்பாஸுக்கு செல்கிறார்களா?
பெரும்பாலான போட்டியாளர்களுக்கு, பிக்பாஸ் என்ன மாதிரியான முக மதிப்பைக் கொடுக்கிறது? எந்த சேதமும் இல்லாமல் தப்பித்தால் நீங்கள் அதிர்ஷ்டசாலி, அவ்வளவு தான். ஆனால் இது புதியவர்களுக்கு மிகவும் பயனளிக்கும்.
இதனை ஆங்கிலத்தில் படிக்க - Regardless of who bags the title, Bigg Boss is the ultimate winner: Kasthuri