Kamal Haasan's Bigg Boss Tamil Day 3 Episode: நேற்று பிக்பாஸ் வீட்டில் சண்டையும் அழுகையுமாக இருந்தது. காலையில் மெர்சல் படத்தின் பாடலை ஒலிபரப்பி ஹவுஸ்மேட்ஸ் அத்தனை பேரையும் எழுப்பி விட்டார் பிக்பாஸ். கர்நாகட சங்கீத பாடகரான மோகன் வைத்யா, ஹவுஸ்மேட்ஸ் அனைவருக்கும் குத்து நடனம் கற்றுக் கொடுக்க வேண்டுமென பிக்பாஸிடமிருந்து உத்தரவு வருகிறது. அவரும் அதனை தட்டாமல் செய்கிறார். ஹவுஸ்மேட்ஸ் சிரித்து டயர்டாகிறார்கள்.
மதுமிதா தனது கணவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் கூறுகிறார். கீரை டப்பாவால் அபிராமிக்கும், மீராவுக்கும் சண்டை நடக்கிறது. பிக்பாஸ் குடும்பத் தலைவராக வனிதா இடையில் புகுந்து பஞ்சாயத்து செய்கிறார். பின்னர் இருவரும் அழுகிறார்கள். மீராவை ஃபாத்திமாவும், அபிராமியை வனிதாவும் தேற்றுகிறார்கள். இருப்பினும் சண்டை நீள்கிறது. பின்னர் கவின் வருகை தந்து அபிராமியை சமாதானப்படுத்துகிறார்.
big boss 2019 tamil : கமல்ஹாசன்
Star vijay tv Bigg Boss Tamil Day 3 Episode- பிக் பாஸ் சீசன் 3
இதனைத் தொடர்ந்து இந்த வாரத்திற்கான ’லக்ஸ்ஸுரி பட்ஜெட்’டிற்கான டாஸ்க் தருகிறார் பிக்பாஸ். சீட்டுகள் வைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொருவராக அழைக்கப்பட்டு, ஒரு சீட்டு எடுத்து, அதில் என்ன எழுதியிருக்கிறதோ அதை செய்ய வேண்டும் என்பது பிக்பாஸின் கட்டளை. முதலில் மோகன் வைத்யா அழைக்கப்பட்டு, தனக்கு நேர்ந்த இழப்பு குறித்து பகிர்ந்துக் கொள்ளும்படி கூறப்பட்டிருந்தது. அவர் தனது மாற்றுத்திறனாளி (காது கேளாமல், வாய் பேச முடியாதவர்) மனைவியின் இழப்பு குறித்து பகிர்ந்து அனைவரையும் உணர்ச்சிவசப்பட வைத்தார். பிக்பாஸ் குடும்பமே சோகத்தில் மூழ்கியிருந்த நிலையில், பின்னர் ரேஷ்மா அழைக்கப்படுகிறார்.
அவர் தனது வாழ்வின் சோகங்களையும், இரண்டு திருமணம் செய்து, இரண்டுமே தன்னை எந்தளவுக்கு பாதித்தது என்பதையும், 9 மாத கர்ப்பமாக இருந்தபோது, குழந்தை இறந்தது என வார்த்தைகள் வராமல் தவித்து பார்வையாளர்களையும் கண் கலங்க வைத்தார். இதனால் ஒட்டு மொத்த பிக்பாஸ் குடும்பமும், கண்ணீர் கடலில் மூழ்கியது.
பின்னர் மறக்க முடியாத தருணத்தைப் பகிர்ந்துக் கொள்ளும்படி அபிராமியிடம் கேட்கப்பட்டது. நேர் கொண்ட பார்வை படத்தில் நடித்தது தான் தன்னால் மறக்க முடியாத ஒன்று என அதனை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துக் கொண்டார் அபி.
மொத்தத்தில் சோகம், அழுகை, மகிழ்ச்சி, நெகிழ்ச்சி என கலவையாக கழிந்தது நேற்றைய பிக்பாஸ்!