Bigg Boss Tamil 3: ரேஷ்மாவுக்கு சர்ச்சையான டாஸ்க் - முதல் நாளிலேயே அதிருப்தியை சம்பாதித்த தர்ஷன்!

எப்போதும் கிளீனிங் டீம் என பொதுவாகப் பிரிக்கப்படும். ஆனால் இந்த முறை பாத்ரூம் கிளினீங் டீம் எனத் தனியாகப் பிரிக்கப்பட்டுள்ளது. 

எப்போதும் கிளீனிங் டீம் என பொதுவாகப் பிரிக்கப்படும். ஆனால் இந்த முறை பாத்ரூம் கிளினீங் டீம் எனத் தனியாகப் பிரிக்கப்பட்டுள்ளது. 

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
bigg boss today

bigg boss today

Bigg Boss Tamil: பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் கடந்த ஞாயிற்றுக் கிழமை தொடங்கியது.

Advertisment

நிகழ்சியில் கலந்துக் கொண்ட போட்டியாளர்களை முதல் எபிசோடில் அறிமுகப்படுத்தி வைத்தார், பிக்பாஸ் தொகுப்பாளர் கமல். நேற்று போட்டியின் முதல் நாள். பிக்பாஸ் வீட்டின் கேப்டன், குக்கிங் டீம், கிளினிங் டீம், பாத் ரூம் கிளினிங் டீம், பாத்திரம் கிளினிங் டீம் ஆகியவை தேர்வு செய்யப்பட்டன. எப்போதும் கிளீனிங் டீம் என பொதுவாகப் பிரிக்கப்படும். ஆனால் இந்த முறை பாத்ரூம் கிளினீங் டீம் எனத் தனியாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

முதல் வாரத்திலேயே பிக்பாஸ் வீட்டின் கேப்டன் ஆகியிருக்கிறார் வனிதா விஜயக்குமார். பின்னர் அனைவருக்கும் டாஸ்க் கொடுத்தார் பிக்பாஸ். அதன்படி சக போட்டியாளர் தரும் டாஸ்க்கை செய்ய வேண்டும் என்பது தான் விதி.

இதில் வித்தியாசமான நடன மூவ்மெண்ட் சேரனுக்குக் கொடுக்கப்பட்டது. அவரும் அசராமல் ஆடி, பாராட்டு பெற்றார். நாய் குரைத்து துரத்துவது போலவும், திருடி விட்டு அழாமல் மன்னிப்புக் கேட்பது போலவும் நடிக்கும் படி சாண்டிக்கு டாஸ்க் கொடுக்கப்பட்டது. அவரும் தனது டாஸ்க்கை சிறப்பாக செய்தார்.

Advertisment
Advertisements

இதன்படி தர்ஷன் ரேஷ்மாவுக்கு டாஸ்க் கொடுக்கும் முறை வந்தது. அவர் கொடுத்த டாஸ்க் என்ன தெரியுமா? முதலிரவு அறையில் கணவருடன் இருப்பது போன்ற சூழலை பெர்ஃபார்ம் பண்ணும்படி ரேஷ்மாவுக்கு டாஸ்க் கொடுத்தார். இதனால் நெட்டிசன்களிடையே அதிருப்தியை சம்பாதித்திருக்கிறார் தர்ஷன். எவ்வளவோ டாஸ்க் இருக்கும் போது, உங்களக்கு இதைத் தவிர வேறொன்றும் தெரியாதா தர்ஷன் எனக் கேள்வி எழுப்பி வருகிறார்கள் நெட்டிசன்கள்.

Bigg Boss Tamil Bigg Boss

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: