Bigg Boss Tamil 3 - Day 24: கடந்த மாதம் 23-ம் தேதி தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக ஒரு மாதத்தை தொட இருக்கிறது. மொத்தம் 16 பேர் கலந்துக்கொண்ட இப்போட்டியில் இதுவரை இரண்டு பேர் வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள் இப்போது 14 பேர் பிக் பாஸ் வீட்டில் இருக்கிறார்கள்.
நேற்று இந்த வாரத்திற்கான luxury task விளையாடப்பட்டது. இதில் 1200 பாயிண்டுகளை போட்டியாளர்கள் வென்றனர். ஆனால் புகைப்பிடிக்கும் அறையில் ஒருவருக்கு அதிகமான ஆட்கள் இருந்ததால் அதிலிருந்து நூறு பாயிண்டுகளை பிக் பாஸ் குறைத்துவிட்டார். பின்னர் பிக் பாஸ் போட்டியாளர்கள் அணிகளாக பிரிக்கப்பட்டு மூன்று தலைப்புகளில் பேசும்படி கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
அதில், பிக் பாஸ் வீட்டில் இருப்பது நட்பா? இல்லை அதையும் தாண்டிய புனிதமா?, பிக் பாஸ் போட்டியாளர்கள் வாய் பேச்சில் வல்லவர்களாக? இல்லை மெளன குருக்களா? பிக்பாஸ் போட்டியாளர்களில் சுத்தம் செய்யும் அணியினர் வேலை செய்கிறார்களா? அல்லது செய்வது போல் நடிக்கிறார்களா? ஆகிய தலைப்புகளில் போட்டியாளர்கள் தங்களது விவாதத்தை தொடங்கினர். இதில் சேரன், மதுமிதா, அபிராமி, லாஸ்லியா, ஷெரின், தர்ஷன் ஆகியோரின் அணி வெற்றி பெற்றது. இந்த விவாதத்திற்கான நடுவராக மீரா மிதுன் செயல்பட்டார்.
விவாதம் முடிந்த பிறகு தன்னுடைய சொந்த விஷயங்களை மதுமிதா குறிப்பிட்டதற்கு மீரா மீதூன் லைட்டாக முகத்தைக் காட்டினார். அதேபோல அபிராமியும், முகின் ராவின் பேச்சுக்கு அவரிடம் வருத்தம் தெரிவித்தார். இதை கவனித்த ரேஷ்மா, சாக்ஷி மற்றும் ஷெரீன் ஆகியோர் தனியாக பேசி சிரித்துக் கொண்டனர்.
லாஸ்லியா உடன் நடந்த உரையாடலின் போது, சாக்ஷியை தான் காதலிக்கவில்லை, ஆனால் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே சென்ற பிறகு நட்பு தொடரும் என கவின் தெரிவித்தார். லாஸ்லியாவின் அறிவுரையைக் கேட்டு, சாக்ஷியிடம் பேசும் முயற்சிகளில் ஈடுபட்டார் கவின்.
இருப்பினும் அந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டவில்லை. முடிவில் கவினுடான நட்பை முறித்துக்கொண்டார் சாக்ஷி. இங்கும் சரி, வெளியில் சென்றாலும் சரி நாம் இருவரும் பேசிக்கொள்ள வேண்டாம், பார்த்துக் கொள்ள வேண்டாம் என கவினிடம் சொல்லிவிட்டார் சாக்ஷி.
விவாதம் டாஸ்க்கால் ஏதாவது சண்டை வரும் என நினைத்த பிக்பாஸின் திட்டம் சரியாக பலித்துவிட்டது. இதன் விளைவு பின்வரும் நாட்களில் பிரதிபலிக்கும் என்றே தெரிகிறது.