scorecardresearch

ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிப்போன லாஸ்லியா.. ரசிகர்கள் ஷாக்!

பிக்பாஸ் சீசன் 3 மூலம் பிரபலமான லாஸ்லியா மரியநேசன் தற்போது ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறியிருக்கிறார்.

ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிப்போன லாஸ்லியா.. ரசிகர்கள் ஷாக்!

இலங்கையில் தமிழர்கள் அதிகம் வாழும் வட மாகாணத்தின் கிளிநொச்சி மாவட்டத்தில் பிறந்தவர் லாஸ்லியா மரியநேசன். குடும்ப வறுமையின் காரணமாக, 18 வயதிலே செய்திவாசிப்பாளராக வேலைக்கு சென்றார். அங்கு ஓரளவுக்கு கிடைத்த புகழ் மூலம், பிக்பாஸ் சீசன் 3 போட்டியில் கலந்து கொண்டார். அப்போது தான் தமிழ் ரசிகர்களுக்கு லாஸ்லியா அறிமுகமானார்.

இவரது யாழ்ப்பாண தமிழை கேட்கவே பலரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்தனர். நிகழ்ச்சியின் போது, ​​லாஸ்லியாவுக்கும் இணை போட்டியாளரான கவினுக்கும் இடையே அற்புதமான கெமிஸ்ட்ரி இருந்தது, இதற்காக ”கவிலியா” என்ற ஹேஷ்டேக் எல்லாம் தொடங்கி ரசிகர்கள் டிரெண்ட் செய்தனர்.

ஆனால், லாஸ்லியாவின் செயலால் அவரது பெற்றோர் வருத்தத்தில் இருந்தனர். ஏறக்குறைய பத்தாண்டுகளுக்குப் பிறகு பிபி வீட்டில் தனது தந்தையை சந்தித்த லாஸ்லியா மனம் உடைந்தார். இந்தச் சந்திப்பிற்குப் பிறகு லாஸ்லியாவும், கவினும் விலகி ஆட்டத்தில் கவனம் செலுத்த முயன்றனர். பின்னர் கவின் மற்றும் சாண்டி ஆகியோரால் பிபி வீட்டில் உருவான வி ஆர் தி பாய்ஸ் கேங்கில் லாஸ்லியா மட்டுமே ஒரே பெண்ணாக இருந்தார்.

இந்த சீசனில் முகின்ராவ் வெற்றி பெற்றாலும், உண்மையான வெற்றியாளராக லாஸ்லியாவை தான் மக்கள் பார்த்தனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு, பிறகு லாஸ்லியா ப்ரென்ட்ஷீப் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார். இந்த படத்தில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், அர்ஜுன் மற்றும் சதீஷ் உள்ளிட்டோரும் நடித்திருந்தனர்.

இதுகுறித்து லாஸ்லியா ஒரு பேட்டியில் கூறுகையில், தொடங்கும் போது எனக்கு எதுவும் தெரியாது. நானே அனைத்தையும் கடந்து வந்தேன். எனக்கு நடிக்க வேண்டும் என்று ஆசை இருந்ததில்லை. ஆனால் எப்போதுமே விஜய் டிவியில் ஒரு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. அது என் கனவு. எனது தந்தை தீவிரமாக கிரிக்கெட் பார்ப்பார். அவர் இந்திய அணியின் மிகப்பெரிய ரசிகராக இருந்தார். நான் ஹர்பஜன் சிங்குடன் இணைந்து திரைப்படத்தில் நடிக்கப்போகிறேன் என்பது தெரிந்து அவர் மகிழ்ச்சியடைந்தார் என்று கூறியுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சமூக ஊடகங்களில் ஏராளமான ரசிகர்கள் லாஸ்லியாவை பின்தொடர்கின்றனர். இந்நிலையில் லாஸ்லியா தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட சமீபத்திய புகைப்படங்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

அதில் ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு லாஸ்லியா மெலிந்திருக்கிறார். தனது கூந்தலையும் குட்டையாக வெட்டியுள்ளார்.  இதைப்பார்த்த பலரும் நீங்கள் உண்மையிலே லாஸ்லியாவா என கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டனர். மேலும் சிலர் நாளுக்குநாள் அழகு மெருகேறிக் கொண்டே போகிறது என்று கூறியுள்ளனர்.

லாஸ்லியா பிக்பாஸ் வீட்டில் இருந்த போது இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் லாஸ்லியாவிடம், திரை உலகம் உங்களை வரவேற்க காத்திருக்கிறது என்று கூறியிருந்தார். அதேபோல தற்போது அவர் தயாரித்து, நடிக்கும் ‘கூகுள் குட்டப்பா’ படத்தில் லாஸ்லியா முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.மேலும் சில படங்கள் அவர் கைவசம் உள்ளன.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Bigg boss tamil 3 fame losliyas latest instagram picture goes viral on social media