Bigg Boss Tamil Season 3 Finale Updates: பிக் பாஸ் சீசன் 3 இன்று கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் பிக் பாஸ் டைட்டில் வின்னர் யார் என்பதை அறிந்துகொள்ள இந்த லைவ் பிளாக்கில் காணாலாம்.
ஸ்டார் விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி கடந்த ஜூன் 23 ஆம் தேதி தொடங்கியது. இந்தபாத்திமா பாபு, மோகன் வைத்யா, மீரா மிதுன், சரவணன், சேரன், வனிதா விஜயகுமார், கவிண், தர்ஷன், முகேன், சாண்டி, ஷெரின், லாஸ்லியா உள்ளிட்ட 16 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். இந்த சீசனை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவருகிறார்.
பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி 105 நாட்கள் கடந்த நிலையில் இன்று 105வது நாள் நிகழ்ச்சியின் இறுதி நாளாகும். பிக் பாஸ் நிகழ்ச்சியின் விதிகள்படி போட்டியாளர்கள் ஒவ்வொருவராக வெளியேற்றப்பட்டு தற்போது பிக் பாஸ் வீட்டில், சாண்டி, முகேன், லாஸ்லியா, ஷெரின் ஆகிய 4 பேர் உள்ளனர்.
இன்றைய பிக் பாஸ் சீசன் 3 கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியில் பிக் பாஸ் டைட்டில் வின்னர் யார் என்று அறிவிக்கப்பட உள்ளார். இந்நிலையில், பிக் பாஸ் சீசன் கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சி ஆரவாரத்துடன் நடைபெற்று வருகிறது. பிக் பாஸ் டைட்டிலை வெற்றிகொள்ளப்போகும் அந்த அந்த அதிர்ஷ்டசாலி யார் என்று தெரிந்துகொள்ள இந்த லைவ் பிளாக்கில் இணைந்திருங்கள்.
பிக் பாஸ் சீசன் 3 கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியில் இறுதிப் போட்டியாளர்களாக நான்கு பேர் இடம்பெற்றனர். இதில் ஷெரின் மற்றும் லாஸ்லியா வெளியேற்றப்பட்டனர். இதையடுத்து, சாண்டி மற்றும் முகேன் இருவர் மட்டுமே இறுதிப் போட்டியாளர்களாக இருந்தனர். இந்நிலையில், பிக் பாஸ் டைட்டிலை முகேன் வென்றார். இதனை கமல்ஹாசன் அறிவித்தார்.
பிக் பாஸ் வீட்டை விட்டு அரங்குக்கு வந்தார்கள் சாண்டி மற்றும் முகேன். அவர்களை ரதத்தில் அழைத்து வந்தார் கமல்ஹாசன்.
பிக் பாஸ் வீட்டின் விளைக்கை அணைத்துவிட்டு இறுதி போட்டியாளர்கள் சாண்டியும் முகேனும் வெளியே வந்தார்கள்.
பிக் பாஸ் சீசன் 3 கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியில் வனிதா விஜயகுமார் சொடக்கு மேல சொடக்கு போடுது என்ற பாடலுக்கு நடனம் ஆடுகிறார்.
பிக் பாஸ் சீசன் 3 கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியில் இறுதிப் போட்டியாளர்களான முகேன் சாண்டியிடம் பிக் பாஸ் பேசுகிறார்.
பிக் பாஸ் சீசன் 3 கிராண்ட் ஃபினாலேவில் வெளியேறிய லாஸ்லியா, இந்த நிகழ்ச்சியில் யார் என்றே தெரியாத 16 பேர்களுடன் வந்தேன். யாரென்றே தெரியாத மனுஷனோட மனுஷன் கனெக்ட் ஆக முடியும் என்பதை கற்றுக்கொண்டேன் என்று கூறினார்.
பிக் பாஸ் சீசன் 3 கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியில் 4 இறுதிப் போட்டியாளர்களில் ஷெரினைத் தொடர்ந்து லாஸ்லியா வெளியேறினார். லாஸ்லியாவை அரங்குக்கு அழைத்துச் சென்றார் ஸ்ருதிஹாசன்.
பிக் பாஸ் சீசன் 3 கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சிக்கு ஸ்ருதி ஹாசன் வந்துள்ளார். ஸ்ருதி ஹாசன்அடுத்ததாக வெளியேறப்போகும் போட்டியாளரை அழைத்துவரப்போகிறார்.
பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கிராண்ட் ஃபினாலே போட்டியாளர்களில் ஒருவரான முகேனிடம் பார்வையாளர் ஒருவர் முகேனை ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும் என்று கூறினார்.
பிக் பாஸ் சீசன் 3 போட்டியாளர்களை கிண்டல் செய்து கலக்கப்போவது யாரு மிமிக்ரி கலைஞர்கள் நிகழ்ச்சி
பிக் பாஸ் பாஸ் 3 கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியில் ராஜேஷ் வைத்யா வீணை வாசிக்க நடிகர் கமல்ஹாசன் நினைவே ஒரு சங்கீதம் பாடலைப் பாடினார்.
வீணை இசைக் கலைஞர் ராஜேஷ் வைத்யாவின் வீணை இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
தர்ஷன் ஐ ராஜ்கமல் குழுவில் இணைத்துக் கொள்வதாக அறிவித்த கமலஹாசன் அதற்கான அடையாள அட்டையை அணிவித்தார். பார்வையாளர்கள் வரிசையில் இருந்த தர்ஷன் இன் தாயார் இதைப் பார்த்து கண்ணீர் சிந்த நெகிழ்ச்சியான காட்சிகள் அரங்கேறின. தர்ஷன் கூறுகையில் எங்க அம்மா கஷ்டப்பட்டு அழுது பார்த்திருக்கிறேன் முதல் முறையாக அவர்கள் சந்தோஷத்தில் கண்ணீர் வடிப்பதை பார்க்கிறேன் என்று நெகிழ்ச்சியாக கூறினார்
Best buddy விருது ஷெரினுக்கு வழங்கப்பட்டது.
பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவரான சேரனுக்கு மோஸ்ட் டிசிப்ளின் விருது (மிகவும் ஒழுக்கமானவர் விருது) பெற்றார். அதனை கமல்ஹாசன் வழங்கினார்.
பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவரான சேரன் மிகவும் ஒழுக்கமானவர் என்ற விருது பெற்றார். அதனை கமல்ஹாசன் வழங்கினார்.
பிக் பாஸ் சீசன் 3 போட்டியாளர்களில் ஒருவரான வனிதா விஜயகுமாருக்கு அவருடைய பிறந்தநாளில் கமல்ஹாசன் தைரியமான பெண் என்று விருது வழங்கினார். நிகழ்ச்சியில் கமல்ஹாசன் படத்தில் நடிக்க வேண்டும் என்று வாய்ப்பை கேட்டு பெற்றார்.
கவினுக்கு பிக் பாஸ் சீசன் 3 கேம் சேஞ்சர் விருதை வழங்கிய கமல்ஹாசன் கவினுக்கு என்று ஒரு தனித்தன்மை இருக்கிறது என்று கூறினார்.
பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கேம் சேஞ்சர் விருது போட்டியாளர்களில் ஒருவரான கவினுக்கு வழங்கினார் கமல்ஹாசன். கஸ்தூரி மேடையில் குழுவினருடன் ஒரு பாட்டுக்கு நடனம் ஆடினார்.
சாண்டி, லாஸ்லியா, முகென் பெயர் எழுதப்பட்ட 3 ஜாடிகளில் அவர்களுக்கு வழங்க விரும்பும் மதிப்பெண் அடிப்படையில் ஒரு திரவத்தை ஊற்றும் படி ஷெரினிடம் கமல் கேட்டார் சாண்டிக்கும் அதிகமாகவும் அடுத்த இடத்தை முகெனுக்கும் மூன்றாவது இடத்தை லாஸ்லியாவுக்கும் கொடுத்தார் ஷெரின்.
பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் இறுதி நான்கு போட்டியாளர்களில் முதல் ஆளாக ஷெரின் வெளியேற்றப்பட்டார். அரங்கினுள் இருந்து ஷெரின் வெளியே அழைக்கப்பட்டார்.
பிக் பாஸ் சீசன் 3 இறுதிப் போட்டியாளர்களில் ஒருவரான ஷெரின் வின்னர் வாய்ப்பை இழந்தார். ஷெரின் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்தார்.
பிக் பாஸ் 2 டைட்டில் வின்னர் ரித்விகா பிக் பாஸ் கேடயத்தை பிக் பாஸ் சீசன் 3 போட்டியாளர்களிடம் எடுத்துச் சென்று காட்டினார். ரித்விகாவுக்கு தேநீர் போடுகிறார் சாண்டி.
பிக் பாஸ் 2 வெற்றியாளர் ரித்விகா பிக் பாஸ் டைட்டில் கேடயத்தைக் கொண்டுவந்து காட்டினார். ரித்விகா பிக் பாஸ் 3 டைட்டிலை வெற்றி பெறுவார் என கணிப்பு
யார் வெற்றி பெற விரும்புகிறீர்கள் என்று கேட்டபோது பாத்திமா பாபு சாண்டி என்று குறிப்பிட்டார்.
யார் வெற்றி பெற விரும்புகிறீர்கள் என்று கேட்டபோது லாஸ்லியா வெற்றி பெற விரும்புவதாகக் கூறினார் வனிதா விஜயகுமார்.
பிக் பாஸ் போட்டியாளர்களில் ஓரிருவர் தவிர அனைவரும் வாழ்த்துவதற்கு வந்துள்ளனர். அவர்களை கமல்ஹாசன் அறிமுகப்படுத்தினர்.
யார் வெற்றியாளர் என நீங்கள் நினைக்கிறீர்கள் என சேரனிடம் கேட்கப்பட்டபோது, ‘முகென் அன்ட் லோஸ்லியா’ என்கிறார்
சாண்டி மாஸ்டருக்கு அவரது குழுவினரின் நடன காட்சிகள் காட்டப்பட்டன. லாஸ்லியா இலங்கையில் படித்த பள்ளி அவரது பூர்வீக வீடு உறவினர்களின் சந்தோஷ பேட்டி ஆகிய வீடியோ காட்சிகள் காட்டப்பட்டன.
ஷெரின் ஏற்கனவே எனது நாயை பார்க்கணும் அவனை பார்த்து எத்தனை நாளாச்சு என கேட்டிருந்தார். வீடியோவில் அவரது நாய் மாடிப்படிகளில் துள்ளிக் குதித்து வரும் காட்சிகள் காட்டப்பட்டன.
பிக் பாஸ் போட்டியாளர்களுடன் கமல் அமர்ந்தபடியே ஒவ்வொரு போட்டியாளர் பற்றியும் வீடியோ தொகுப்பு காட்டப்படுகிறது
முன்னாள் போட்டியாளர்களிடமும் கருத்து கேட்கப்படுகிறது. கவின் கூறுகையில், ‘யார் ஜெயிச்சாலும் சந்தோஷம். லோஸ்லியா ஜெயித்தால் பெருமையா இருக்கும்’ என்கிறார்
சாண்டி மாஸ்டர் தனது மகளுடன் ஏக்கத்துடன் பேசும் காட்சிகளை பார்த்து குடும்பத்தினருடன் நேரம் செலவழிக்க வேண்டிய அவசியம் பற்றி புரிந்து கொண்டதாக சிலர் குறிப்பிட்டனர்
போட்டியாளர்கள் நால்வருக்கும் அவர்களைப் பற்றி பெருமையாக எதுகை மோனையில் எழுதப்பட்ட கவிதை வரிகளை பிரேம் செய்து வழங்கி வருகிறார் கமல்
போட்டியாளர்கள் நான்கு பேர் உடனும் ரிலாக்ஸாக கமல் பேசி வருகிறார். லோஸ்லிய தனது தந்தை இங்கு வந்து விட்டு சேரன் வீட்டுக்கும் சென்று விட்டு கனடா போனதாக குறிப்பிட்டார்
பிக் பாஸ் தமிழ் 3 கிராண்ட் பினாலே தொடங்கியது பார்வையாளர்கள் இந்த நிகழ்ச்சி மூலம் தங்கள் வாழ்வில் நிகழ்ந்த நல்ல மாற்றங்களை விவரித்து வருகிறார்கள்.
பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கமல்ஹாசன் இதுவரை அகம் டிவி வழியே அகத்திற்குள் என்று கூறிவந்த நிலையில் இன்று பிக் பாஸ் கிராண்ட் ஃபினாலேவில் பிக் பாஸ் வீட்டுக்குள் செல்வதாக அறிவித்தார் கமல்ஹாசன்.