Bigg Boss Tamil 3 Grand Finale Live Streaming: பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி இன்று மாலை 6 மணிக்கு கிராண்ட் ஃபினாலே தொடங்குகிறது என்பதால் பலரும் காண ஆவலாக உள்ளனர். அதனால், பிக் பாஸ் நிகழ்ச்சியை எப்படி ஆன்லைனில் பார்ப்பது என்று தெரிந்துகொள்ளுங்கள். பிக் பாஸ் தமிழ் 3 பைனல் லைவ் அப்டேட்களை உடனுக்குடன் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்திலும் காணலாம்.
ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி கடந்த ஜூன் 23 ஆம் தேதி தொடங்கியது. இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த பிக் பாஸ் சீசன் 3 தொடக்கத்தில் 16 பேர் போட்டியாளர்களாக பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்தனர். பிக் பாஸ் விதிகளின் படி பாத்திமா பாபு, சரவணன், வனிதா விஜயகுமார், சேரன், உள்ளிட்ட பலரும் வெளியேற்றப்பட்டனர். இந்நிலையில், இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி இன்று 105வது நாளில் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது.
தற்போது பிக் பாஸ் வீட்டுக்குள் லாஸ்லியா, ஷெரின் சாண்டி, முகேன் ஆகிய போட்டியாளர்கள் உள்ளனர். இவர்களில் யாராவது ஒருவர் பிக் பாஸ் டைட்டிலை வெல்லப் போகிறார். இந்த நிகழ்ச்சியைக் காண பார்வையாளர்கள் பலரும் ஆர்வமாக உள்ளனர்.
பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் ஃபைனல் மாலை 6.00 மணிக்கு தொடங்குகிறது. இந்த நிகழ்ச்சி ஸ்டார் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சியைக் காண்பதற்கு வாய்ப்பு இல்லையென்றால் உங்கள் மொபைல் போனிலேயே பார்க்கலாம். பிக் பாஸ் சீசன் 3 ஃபைனல் நிகழ்ச்சியை ஹாட் ஸ்டாரில் பார்க்கலாம். அதே போல, உங்கள் மொபைல் போனில் ஜியோ டிவியில் ஸ்டார் விஜய் டிவியில் பார்க்கலாம். ஏர்டெல் டிவியிலும் பார்க்கலாம். ஹாட் ஸ்டாரில் லைவ் ஸ்ட்ரீமிங்கிலும் பிக் பாஸ் நிகழ்ச்சியைப் பார்க்கலாம்.
பிக் பாஸ் சீசன் 3 டைட்டிலை வெல்லப்போவது யார் என்பதை மேற்கண்ட வழிகளில் பார்த்து தெரிந்துகொள்ளலாம். பிக் பாஸ் தமிழ் 3 பைனல் லைவ் அப்டேட்களை உடனுக்குடன் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்திலும் காணலாம்.