பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய (ஜூன் 29) எபிசோடை பார்த்த ரசிகர் பெருமக்கள் கமலை பார்த்து ஜொள்ளுவிட்டுள்ளனர். பிக்பாஸ் சீசன் 3யும் நடிகர் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்குகிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை போட்டியாளர்களை அறிமுகப்படுத்தி பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைத்தார் கமல்ஹாசன். அதனை தொடர்ந்து நேற்றுதான் மீண்டும் சந்தித்தார். கடந்தசில நாட்களாக பல சுவாரசியமான சம்பவங்கள் நடந்துள்ள நிலையில் கமல் பங்குபெறும் எபிசோடு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதில் பிரவுன் பேன்ட் ஹாஃப் ஸ்லீவ் ஷர்ட்டில் செம ஃபிரஷாக தோன்றினார் கமல். அப்போது காத்திருந்து காத்திருந்து கருணை மழை பொழிந்தது அன்பாய் என்றார். பல நாள் காத்திருப்புக்கு பின்னர் இந்த வாரத்தில் சென்னையின் பெரும்பாலான இடங்களில் பரவலாக மழை பெய்தது.
பிக்பாஸ் வீட்டிலும் ஹவுஸ் மேட்ஸ்கள் தங்களின் சோகக்கதையை சொல்லி அழுத போது சக ஹவுஸ்மேட்ஸ்கள் கட்டியணைத்து ஆறுதல் கூறினர். இந்த இரண்டையும் குறிப்பிடும் வகையில் ஒரே டயலாக்காய் காத்திருந்து காத்திருந்து கருணை மழை பொழிந்தது அன்பாய் என்று கூறினார்.
கமல் புராணம் போதுமென்று நினைக்கிறேன்...
பிக்பாஸ் 3 நிகழ்ச்சியின் 5ம் நாள் ( ஜூன் 28) எபிசோடு குறித்த பார்வை இதோ
வனிதாவுக்கும் மீராவுக்கும் இடையே சண்டை. ஏற்கனவே கத்தி கத்தி பேசும் வனிதா, மீரா எப்போது சிக்குவார் என காத்திருக்கிறார். அதற்கு ஏற்றாற்போல கன்டென்ட் கொடுக்கிறார் மீரா. யார் சொல்வதையும் காதில் கொஞ்சம் கூட கேட்காமல் தான் பேசுவதுதான் சரி என்கிறார் மீரா.
நேற்றைய எபிசோடில் பாத்திரம் கழுவ முடியவில்லை என்று கூறினார் மீரா. இதைத்தொடர்ந்து கேப்டனான வனிதா, பாத்திரம் கழுவ விருப்பமில்லாவிட்டால் டாய்லெட் கழுவ போ, என்கிறார். இதனால் ஏற்படுகிறது பிரச்சனை.
சாய்ஸை நீங்கள் மாற்ற முடியாது என்கிறார் மீரா. இதனால் ஹவுஸ் மேட்ஸிடம் டிப்பார்ட்மென்டை மாற்ற எனக்கு உரிமை இருக்கிறதா இல்லையா என கேட்கிறார் வனிதா. அப்போது உஷ்ணம் உச்சிக்கு ஏற என்னிடம் கத்தி பேச நீங்கள் ஒன்றும் என் அப்பாவோ அம்மாவோ இல்லை என்று கூறிவிட்டு அழுதபடியே ரூமை விட்டு வெளியே போகிறார் மீரா. அப்படியானால் நீ உன் அப்பா அம்மாவிடமே செல்.
உன் வீட்டுக்கு போ, இங்கே இருக்காதே என கத்துகிறார் வனிதா. உடனே எல்லாத்துக்கும் ஒரு எல்லை இருக்கிறது என கத்திவிட்டு அழுதுக்கொண்டே வெளியே செல்கிறார் மீரா. அவர் வெளியே போன பிறகும் டைனிங் ஹாலில் தொடருகிறது சண்டை. இதில் பல சம்பவங்கள் வெளியாயின. சாக்ஷியையும் அபிராமியையும் மீரா மீது அவர்கள் கூறிய குற்றச்சாட்டுகள் குறித்து டைனிங் ஹாலில் பளிச்சென கேட்கிறார் மதுமிதா. அவரை தொடர்ந்து வனிதாவும் சாக்ஷி மீரா குறித்து கூறியதை கேட்டு மூக்கை உடைக்கிறார். இவ்வாறு அந்தநாள் எபிசோடு முடிகிறது.