Bigg Boss Tamil 3 - Day 10: கடந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சி 10 நாட்களைக் கடந்துவிட்டது. முதலில் பவ்யமாக இருந்த ஹவுஸ்மேட்ஸ், தற்போது சுயத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். கோபமும், சண்டையும் அடிக்கடி வெளிப்படுவதால், பிக்பாஸ் நிகழ்ச்சி சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.
தற்போது வரை மீரா மிதுன் மற்றும் மதுமிதா ஆகிய இருவரும் தான் கார்னர் செய்யப்பட்டு வருகிறார்கள். இதனை அபிராமி தலைமையிலான டீம் வெகு சிறப்பாக செய்து வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் 16-வது போட்டியாளராக உள்ளே சென்ற மீராவை ஏற்கனவே தெரிந்து வைத்திருக்கும் அபிராமியும், சாக்ஷியும் முதல் நாளில் இருந்தே தங்களது வெறுப்பைக் கொட்டினர். வார இறுதியில் தமிழ் கலாச்சாரம் என மதுமிதா சொல்லப்போக, அன்றிலிருந்து மற்றவர்களால் கார்னர் செய்யப்பட்டார்.
இந்நிலையில் நேற்று வனிதா, ஷெரின், சாக்ஷி, அபிராமி ஆகியோர், மதுமிதாவை கார்னர் செய்து மீண்டும் சண்டை போட்டனர். முகினை அழைத்து வந்து, ‘இவன் என் ஃபிரெண்ட், எங்களுக்குள்ள பிரச்னைன்னா நாங்களே சால்வ் பண்ணிக்குவோம். யாரும் தலையிட வேண்டாம்’ என உறுமினார் அபிராமி வெங்கடாச்சலம்.
ஒருபுறம் இவர்கள் சண்டைப் போட்டுக் கொண்டிருக்க, மற்றவர்கள் எதுவும் நடக்காதது போல் எந்த ரியாக்ஷனும் இல்லாமல் இருந்தனர். கமல் வார்த்தைக்கு வார்த்தை பிக்பாஸ் குடும்பம் என்கிறார். குடும்பத்தில் இப்படியான சண்டை நடந்தால், இப்படித்தான் வாய் திறக்காமல் இருப்பார்களா எனத் தெரியவில்லை.
இந்த சண்டை நிறைவடைந்ததும் நேராக டிரெஸ்ஸிங் ரூமுக்குச் சென்ற சரவணன், இந்த மாதிரியான சூழலில் இருந்தால் மெண்டல் டிஸ்ஸார்டர் வந்துவிடும். என்னை வெளியில் அனுப்பி விடுங்கள் என பிக்பாஸிடம் கெஞ்சுகிறார் சரவணன். தன்னை அனுப்பிவிட்டு, அதற்கு பதிலாக வேறு யாரையாவது அழைத்து வரட்டும் என்பது அவரது எண்ணம்.
சரவணனைத் தொடர்ந்து பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறும் எண்ணம் மதுமிதாவுக்கும் வந்திருக்கிறது. வீட்டில் ஏற்பட்ட மன உளைச்சலால் தனது கணவர் மற்றும் அம்மாவின் ஞாபகம் வந்து விட்டதாகக் கூறி கதறி அழுதார். மொத்தத்தில் பெரும் சண்டையில் தான் நேற்றைய பிக்பாஸ் ஒளிபரப்பானது.