Bigg Boss Tamil 3: பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழக மக்களின் பொழுது போக்கு ஆர்வத்திற்கு தினம் தீனி போட்டுக் கொண்டிருக்கிறது. இரவு நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுவதற்கு முன் ப்ரோமோக்களை அந்த சேனல் நிர்வாகம் வெளியிடும்.
Advertisment
அந்தவகையில் இன்றைய 2 ப்ரோமோக்கள் வெளியாகியுள்ளன. முதல் ப்ரோமோவில், ”லாஸ்லியாவோட அவன் (கவின்) சாப்பிட்டான்னு நீ பண்ணுன்ன பிரச்னைல தான் இதெல்லாம் நடந்துச்சு. அந்த டிஸ்கஷன் இங்க நடந்துச்சா இல்லையா” என வனிதா சாக்ஷிடம் சொல்ல, ”நான் ஒத்துக்குறேன்” என்கிறார் மதுமிதா. ”நீ ஃப்யூச்சர ஸ்பாயில் பண்ணிக்கிற சாக்ஷி” எனவும் எச்சரிக்கிறார் வனிதா. கவின் பேச முயற்சிக்கும் போது, ’என் கிட்ட இனிமே பேசாத’ என லாஸ்லியா கூறுகிறார். பின்னணியில் போ நீ போ பாடல் ஒலிக்கிறது.
அடுத்த ப்ரோமோவில், டாஸ்க்கில் மற்ற போட்டியாளர்கள் உதவாதது குறித்த அதிருப்தியை தெரிவிக்கிறார் சரவணன்.சரவணனை சித்தப்பா என்று உரிமையோடு பேசும் சாண்டி, முகின், தர்ஷன் என யாரும் உதவ முன்வராதது அவருக்கு பெரும் வருத்தம். அதனால், ‘இனி என் வேலையுண்டு என்று இருக்கப்போகிறேன், யாராவது பேசினால், அசிங்கப்பட்டு போவீர்கள்’ என கூறுகிறார்.
இன்றைய நாளின் கடைசி ப்ரோமை விஜய் தொலைக்காட்சியில் தற்போது வெளியிட்டுள்ளது. அதில் ஹவுஸ் மேட் அனைவரும் ஒன்றாக இணைந்து பிக் பாஸ் ஆந்தம் பாடுகின்றனர். இதுவரை பாத்ரூமில் மட்டும் மினி கானா கச்சேரி நடத்தி வந்த கவின் - சாண்டி- தர்ஷன் ஜோடிகள் இன்று ஒட்டு மொத்த குடும்பத்துடன் இணைந்து கானா கச்சேரி நடத்துக்கின்றனர்.
— Vijay Television (@vijaytelevision) 11 July 2019
நேற்றைய கொலைக்காரன் டாஸ்க், பாதிலேயே முடிவடைந்த நிலையில் இன்று டாஸ்க் நடக்குமா? அல்லது பிக் பாஸ் உண்மையான குற்றவாளியை அறிவிப்பார் என்பது போன்ற சுவாரசிய கேள்விகளுக்கு இன்றைய பிக் பாஸ் பதில் கூறும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.