/tamil-ie/media/media_files/uploads/2019/07/Bigg-Boss-Tamil-3-Losliya-Nomination.jpg)
Bigg Boss Tamil 3, Losliya
Bigg Boss Tamil 3: பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசன் கடந்த வாரம் ஞாயிற்றுக் கிழமை தொடங்கியது.நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் 15 பேர் போட்டியாளர்களாக கலந்துக் கொண்டனர். மீரா மிதுன் இரண்டு நாட்கள் கழித்து வைட்ல் கார்ட் எண்ட்ரியாக வீட்டுக்குள் நுழைந்தார்.
இந்நிலையில் முதல் வாரம் என்பதால் போன முறை எலிமினேஷன் இல்லை. இனி வரும் வாரங்களில் கட்டாயம் எலிமினேஷன் முறை பின்பற்றப்படும். இதற்கிடையே இந்த சீசனுக்காக முதல் எலிமினேஷன் நேற்றைய நிகழ்ச்சியில் தொடங்கியது.
முன்னதாக இதில் இயக்குநர் சேரன், லாஸ்லியா மற்றும் தர்ஷனை நாமினேட் செய்யும் புரோமோ நேற்று வெளியானது. முதல் நாளிலேயே ஆர்மி ஆரம்பிக்கும் அளவுக்கு ரசிகர்களை கவர்ந்துள்ள லாஸ்லியாவை சேரன் எதற்காக நாமினேட் செய்தார் என கொதித்துப் போனார்கள் ‘லாஸ்லியா ஆர்மியினர்’. அதோடு சேரனை திட்டி தீர்த்து தங்களது கோபத்தை வெளிப்படுத்தினர்.
இதற்கிடையே நேற்றிரவு ஒளிபரப்பான நிகழ்ச்சியில், ”இந்த வீட்டில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான குரூர முகங்களுடன் இருக்கிறார்கள். லாஸ்லியாவும், தர்ஷனும் அப்பழுக்கற்ற குழந்தைகளாக இருக்கிறார்கள். அவர்கள் இப்படியான இடத்தில் இருக்கத் தேவையில்லை” என கன்ஃபெஷன் ரூமில் தனது நாமினேஷனுக்கு விளக்கமளித்தார் சேரன்.
இதைப் பார்த்த பின், “ஆமால்ல அவர் சொல்றதும் சரிதான்” என்கிற ரீதியில், அவசரப்பட்டு சேரனை திட்டி விட்டோமே என்று வருந்துகிறார்கள் லாஸ்லியா ஆர்மியினர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.