Bigg Boss Tamil 3: இந்த சீசனில் முதல் குறும்படம் சாக்‌ஷிக்கு தான்!

அபிராமி, ரேஷ்மா, சாக்‌ஷி ஆகியோருடன் நட்பு பாராட்டிய கவின், தற்போது லாஸ்லியாவை ’இம்ப்ரெஸ்’ செய்ய முயற்சிக்கிறார்.

Bigg Boss Tamil 3 Sakshi Agarwal
Sakshi Agarwal

Bigg Boss Tamil 3 – Day 9: மூன்றாவது முறையாக தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் கலந்துக் கொண்டுள்ளனர். மூன்றாவது முறையாக இதனை நடிகர் கமல் தொகுத்து வழங்குகிறார்.

நேற்றைய எபிசோட்டில் எப்போதும் போல பாடல் ஒலித்து பிக்பாஸ் வீட்டினரை எழுப்பி விட்டது. பிறகு மதுமிதா அழைக்கப்பட்டு, வாழ்க்கையில் வெற்றியடைவதற்கு ஏதுவாக ஊக்கப்படுத்தும் விதத்தில் பேச வேண்டும் என பிக்பாஸால் கேட்டுக் கொள்ளப்பட்டார். அவரும் தனது பேச்சை வேகமாக ஆரம்பிக்க, அவருக்கு ஸ்பீடு பிரேக் போட்டார் வனிதா விஜயக்குமார். அந்த பாட்டில் பிரச்னை இன்னும் சால்வ் ஆகாமல், மதுமிதாவுக்கும் அபிராமி மற்றும் அவரின் சகாக்களுக்கும் இடையில் ‘சவ்வாக’ இழுக்கிறது.

அபிராமி, ரேஷ்மா, சாக்‌ஷி ஆகியோருடன் நட்பு பாராட்டிய கவின், தற்போது லாஸ்லியாவை ’இம்ப்ரெஸ்’ செய்ய முயற்சிக்கிறார். அவரைப் பார்த்து சிரிப்பது, பாட்டு பாடுவது என தன்னால் முடிந்த அனைத்து விஷயங்களையும் செய்கிறார்.

பின்னர் ’என்னவா இருக்கும்’ என்ற டாஸ்க்கில் சிங்கம், ஓநாய், அன்னப்பறவை, யானை என்று 4 அணிகளாக பிரிந்து விளையாடும்படி உத்தரவிடுகிறார் பிக்பாஸ். இதில் முதலாக களம் இறங்கிய சிங்கக்குட்டிகள் டீமிற்கு ‘இப்போவே கண்ண கட்டுதே’ என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதன்படி வண்டியில் அமர்ந்திருக்கும் பீம்பாயின் கால் தரையில் படாதவாறு செய்ய வேண்டும் என்ற டாஸ்க் கொடுக்கப்படுகிறது. இதில் வனிதா கலந்துக் கொண்டு, அதிக முயற்சி செய்து வெற்றி பெறுகிறார். அதற்காக அவருக்கு 1000 மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது.

இதற்கிடையே முகெனும், மீராவும் பேசியதை அரைகுறையாய் கேட்டு, “நம்முடன் பேசக்கூடாது” என முகெனை எச்சரிக்கிறாள் மீரா எனக் கொளுத்திப் போடுகிறார் சாக்‌ஷி. இதனால் மிகுந்த கோபமடைந்த அபிராமி, ’அவள வர சொல்லு ஒரு கை பாக்கலாம்’ என்ற ரீதியில் ’அடிச்சு மீராவின் மூஞ்சை ஒடைச்சுறுவேன்’ என்கிறார்.

ஆனால் முகெனுடன் மீரா பேசியது, “என்னிடம் யாராவது நெருக்கமாக ஃபிரெண்ட்லியாக இருந்தால் இங்கு சிலருக்கு பிடிக்காது. நீ எல்லாரிடமும் பேசு. நான் அதில் குறுக்கிட மாட்டேன்” என்கிறார். இதை அரைகுறையாய் கேட்ட சாக்‌ஷி கலவரத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார்.

இந்நிலையில் இந்த பிரச்னை தொடரும் பட்சத்தில், சாக்‌ஷிக்காக கமல், இந்த வாரம் குறும்படம் போட வேண்டும் என்கிறார்கள் ரசிகர்கள்.

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Bigg boss tamil 3 meera mithun abhirami sakshi kurumpadam

Next Story
’ரஜினி சாருடன் மீண்டும் வேலை செய்ய ஆர்வமாக உள்ளோம்’ – தனுஷ்!Rajini working with Dhanush
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com