பிக் பாஸில் புகைபிடிக்கும் அறை: சுழலும் இன்னொரு சர்ச்சை

Bigg Boss Tamil 3 news: புகைபிடிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருவதாக புகார் சுமத்தப்படுகிறது.

தமிழில் பிக்பாஸ் சீசன் 3 சில பிரச்னைகளுடன் போய்க்கொண்டிருக்கிறது. இந்நிலையில், பிக் பாஸ் வீட்டில் புகைபிடிப்பதற்கு என ஒரு தனி அறையை உருவாக்கியது சட்ட விரோதமானது என புகார் எழுந்திருக்கிறது. பிக் பாஸ் தயாரிப்பு நிறுவனம் மீது புகையிலைப் பொருட்கள் கண்காணிப்பகம் மாநில, மத்திய அரசு ஆணையங்களுடன் இணைந்து சிகரெட் மற்றும் இதர புகையிலை உற்பத்திச் சட்டப்படி புகார் ஒன்றை பதிவு செய்துள்ளது.

தமிழில் பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவில் முதல் சீசனிலிருந்து புகைபிடிக்கும் அறை ஒன்று இடம் பெற்றுவருகிறது. கேமிராக்களுடன் பொருட்கள் சிதறிக்கிடக்கும் மிகவும் பாதுகாப்பான அந்த இடத்தில் போட்டியாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள். பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் புகைபிடிக்கும் அறை மிகவும் சிறியதாக மறுகட்டமைப்பு செய்யப்பட்டுள்ளது. ஆனால், அங்கே பங்கேற்பாளர்களின் தனிப்பட்ட உரையாடல்களுக்கு வாய்ப்பளிக்க கேமிராக்கள் ஏதும் இல்லை.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3 சீசன்களிலும் கலந்துகொண்ட பல போட்டியாளர்கள் குறிப்பாக முதல் சீசனில் பங்கேற்ற ஓவியா போன்ற நட்சத்திர பெண்கள் நிகழ்ச்சியில் புகைபிடிப்பதற்கு வெட்கப்பட்டனர். மேலும், மற்ற இரண்டு பிக் பாஸ் போட்டியாளர்களும் பார்வையாளர்களும் அதே போல வெட்கப்பட்டனர்.

ஆனால், இப்போது புகைப்பிடிக்கும் பகுதி தடை செய்யப்பட்டுள்ளதா? என்ற கேள்விக்கு, புகையிலைப் பொருட்கள் கட்டுப்பாட்டுக்கான தமிழ்நாடு மக்கள் மன்றத்தின் ஒருங்கிணைப்பு அலுவலர் எஸ்.சிறில் அலெக்ஸாண்டர் இந்த பிரச்னை தொடர்பாக ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார். “சிகரெட் மற்றும் இதர புகையிலை உற்பத்திச் சட்டம் 2003, 4வது பிரிவின்படி பொது இடத்தில் யாரும் புகைபிடிக்க கூடாது. 30 அறைகளைக் கொண்ட ஹோட்டல்கள், மற்றும் 30 அல்லது அதற்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் இருக்கைகள் கொண்ட ரெஸ்டாரண்ட்கள், விமான நிலையங்கள் ஆகிய இடங்களில் புகைபிடிப்பதற்கான பகுதி அல்லது அதற்கான தனி இடத்தை எற்பாடு செய்யலாம் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.” என்று தெரிவித்திருக்கிறார்.

மேலும், எஸ்.சிறில் அலெக்ஸாண்டர் கூறுகையில், ‘புகைபிடிப்பதற்கான பகுதியை அமைப்பது என்பது விமான நிலையங்கள், ஹோட்டல்கள், ரெஸ்டாரண்ட்களில் மட்டும்தான் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால், உலகம் முழுவதும் இந்த நிகழ்ச்சியை பார்ப்பவர்களுக்கு சட்ட விரோதமான புகைபிடிக்கும் பகுதி என்பது மோசமான தாக்கத்தை அளிக்கும்.’ என கூறியிருக்கிறார்.

இந்த அமைப்பு தமிழில் பிக் பாஸ் 3வது சீசன் நிகழ்சி தொகுப்பாளரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், பிக் பாஸ் நிகழ்ச்சி தயாரிப்பாளருடன் சேர்ந்து பிக் பாஸ் வீட்டுக்குள் புகைபிடிக்கும் அறையை உருவாக்கி புகைபிடிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருவதாக புகார் சுமத்தப்படுகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட போட்டியாளர் வனிதா மீது அவருடைய முன்னாள் கணவர் ஆனந்த் ராஜன் தனது மகளை கடத்தி சென்றுவிட்டதாக புகார் அளித்தார். புகாரின் பேரில், பிக் பாஸ் 3வது சீசன் நிகழ்ச்சி நடைபெறும் பிக் பாஸ் வீட்டுக்கு ஏற்கெனவே காவல்துறை அதிகாரிகள் சென்று பார்வையிட்டு வனிதாவிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

அதனால், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சர்ச்சை ஒன்றும் புதிதல்ல. இதற்கு முந்தைய பிக் பாஸ் சீசன்களில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பெயருக்கு இழுக்கு ஏற்படுத்தும் விதமாகவும், தமிழ் கலாச்சாரத்தை அவமதிக்கும்படியாக டாஸ்க்குகள் தலைப்புகள் விவாதிக்கப்பட்டதாகவும் கமல்ஹாசன் மற்றும் தொலைக்காட்சி மீது புகார்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close