Bigg Boss Tamil 3 Promo: பிக்பாஸ் தமிழ் 3 இன்றைய நிகழ்ச்சியில் கவினை ‘எலிமினேட்’ செய்ய சாண்டி மாஸ்டர் ‘நாமினேட்’ செய்ததுதான் திருப்பம். கவினோ, இயக்குனர் சேரனை ‘நாமினேட்’ செய்து சேரனை வெளியே கொண்டு வர விரும்பும் அவரது நண்பர்களின் வயிற்றில் பால் வார்த்தார்.
பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி 70 நாட்களைக் கடந்து விஜய் டி.வி.யில் சக்கை போடு போடுகிறது. இறுதியாக 8 போட்டியாளர்கள் பிக்பாஸ் இல்லத்தில் இருக்கிறார்கள். இன்று (செப். 2) வெளியான முதல் புரொமோவில், சேரன், ஷெரின் ஆகிய இருவரையும் வெளியேற்ற நாமினேட் செய்கிறார். ‘சேரன் அண்ணா, ஷெரின் நீங்க பார்க்காத வெற்றி இல்ல. நேஷனல் அவார்டெல்லாம் வாங்கியிருக்கீங்க. வெற்றின்னா என்னன்னே தெரியாத இந்தப் பசங்க அந்த வெற்றியைப் பார்க்கணும்ங்கிறது என்னோட ஆசை. அதனால் நீங்க ரெண்டு பேரும் கொஞ்சம்...’ என்கிறார்.
Bigg Boss Tamil 3 promo: கவின் - வனிதா மோதல்
அப்போது குறுக்கிடும் வனிதா, ‘இந்த வீட்டுக்குள்ள சொல்லணுமே தவிர, இது நியாயமாப் படலை’ என்கிறார். அதற்கு கவின், ‘நியாயமா அவங்களுக்கு பட்டாப் போதும்’ என வாக்குவாதம் செய்கிறார்.
இரண்டாவது புரமோவில், தனது நண்பர் கவினையும், லாஸ்லியாவையும் எலிமினேஷனுக்கு நாமினேட் செய்வதாக கூறி அதிர வைக்கிறார் சாண்டி மாஸ்டர். அதற்கு சாண்டி சொல்லும் காரணம், ‘அவன் எவ்வளவு ஜாலியா இருப்பான்னு எனக்குத் தெரியும். பழைய மாதிரி அவன் எனக்கு வேண்டும். டேய், வெளிய போடா. எல்லாரையும் சாகடிக்கிறான்’ என்கிறார் சாண்டி.
உடனே கவின் குலுங்கி அழுகிறார். இப்போதும் குறுக்கிடும் வனிதா, ‘நீங்க அழுறதால வெளில இருக்கிறவங்க அழப் போறது கிடையாது. அழுறதப் பார்த்து சிரிப்பாங்க. இத ஒரு கேமாப் பார்க்கணும்’ என்கிறார். சட்டென குறுக்கிடும் சாண்டி, ‘நீ நீயா இரு. நான், நானா இருக்கிறேன். அவ்வளவுதான்’ என்கிறார்.
3-வது புரமோவில் ஆவேசமாக கவினை நோக்கிப் பேசும் வனிதா, ‘என்ன பிரண்ட்ஷிப்... உன்னை மக்கள் இவ்வளவு நாள் காப்பாற்றியிருக்காங்கல்ல. இதுக்கு பதிலா சாக்ஷியை காப்பாற்றியிருந்தா, அவ ஃபைனலுக்கு போயிருப்பா. உன்னால அவ வெளியில போயிட்டா. அதுக்கு என்ன பதில் சொல்லப் போற’ என கேட்கிறார்.
பதிலுக்கு கவின், ‘நான் தான் நேற்றே சொன்னேனே... இப்பவே கதவைத் திறக்கச் சொல்லுங்க. நான் இப்பவே வெளியப் போறேன்.’ என்கிறார். அதற்கு வனிதா, ‘நீ சாக்ஷியை கொண்டு வந்து விட்டுட்டு போ’ என்கிறார். கவின், ‘நீங்க திரும்ப வந்துட்டதால, எல்லா விஷயத்திலும் கரெக்டுன்னு கிடையாதுக்கா’ என வனிதாவை சாடுகிறார்.
வனிதாவோ, ‘யார் கரெக்ட், யார் ராங்குன்றதைப் பற்றி பேசல. இன்ஃப்ளுயன்ஸ் பண்றது ராங். இது சிம்பதிக்கான ஸ்டேஜ் இல்ல’ என பொறிகிறார். மொத்தத்தில் இன்றைய நிகழ்வில் கவின் - வனிதா இடையே மோதல் அனல் பறக்கிறது. லாஸ்லியா, சேரன், தர்ஷன் உள்பட அனைவரும் அமைதியான பார்வையாளர்களாக இருக்கிறார்கள்.