Bigg Boss Tamil 3 : பிக் பாஸ் இல்லத்தில் 17 ஆவது நாளுக்கான ப்ரோம்க்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
100 நாட்கள் 16 பேர் ஒரே வீட்டில் என தொடங்கிய பிக் பாஸ் சீசன் 3 ஆரம்பம் முதலே சூடுப்பிடிக்க தொடங்கியுள்ளது. மீராவின் வருகைக்கு பின்னர் இல்லத்தில் தினம் தினம் ஒரு பிரச்சனை என்பது தொடர் கதை தான்.
"சண்டை இருந்தான்பா பார்க்க நல்லா இருக்கும்” என்கிறார்கள் பிக் பாஸ் வெறியர்கள். வந்த முதல் நாளே தனது குரல் வலத்தால் ரசிகர்களிடம் பகையை சமாதித்த வனிதா சண்டை என்று வந்தால் எந்த லெவலுக்கும் போவார் என்பது இதுவரை வெளிவந்த எபிசோட்டுகளை பார்த்தாலே தெரிந்து விடும்.
நேற்று கொலைக்காரன் டாஸ்க் தொடங்கிய நிலையில், மோகன் வைத்யா மற்றும் சாக்ஷி கொல்லப்பட்டு விட்டனர். இன்றும் இந்த டாஸ்க் தொடரும் என பிக் பாஸ் அறிவித்திருந்த நிலையில், இன்றைய தினத்தின் முதல் ப்ரோமோ காலை வெளியாகியது.
இந்த ப்ரோமோவில் சேரனுக்கும், மீராவுக்கும் இடையே சண்டை மூள்கிறது. சேரன், மீரா, இருவரும் ஒரே டீமில் தான் இருக்கின்றனர். இந்நிலையில் மீரா சரியாக வேலை செய்வதில்லையோ என்கிற சந்தேகத்தின் பேரில் மீராவை வேலை செய்யாமல் தப்பிக்க பார்க்கிறார் என சேரன் கூற, கடுப்பான மீரா என் மீது பழி போட பாக்கதீங்கன்னு கடுப்பா, பேசிட்டு எழுந்து சென்றுவிடுகிறார்.
அடுத்தாக 2 ஆவது ப்ரோமோ வெளியாகியது, அதில் தர்ஷன் திருவிளையாடல் தொடங்கியுள்ளது. இதுவரை அதிகம் ரசிகர்களால் ஈர்க்கப்பட்ட தர்ஷன் இன்று முதல்முறை ஷெரீன் அழகில் மயங்கி அவரை தேவைத என வர்ணிக்கிறார்.
இளம் பெண்களுக்கு அதிகம் பிடித்துள்ளதால் சிங்கிள்ஸுகளுக்கு கடுப்பாக இருந்தாலும் பையன் நியாயமாக நடந்து கொள்கிறார் என்பது தான் தர்ஷன் குறித்து ரசிகர்களின் கருத்து.
மூன்றாவது நாள் ப்ரோமில் மது விளையாடுகிறார். சாக்ஷி குறித்து அவர் கூறும் உண்மைகளை வைத்து வழக்கம் போல் சாண்டி கலாய்த்து தள்ளுகிறார். கவின் - சாக்ஷி காதலையும் மதுமிதா சீண்டி பேசுகிறார்.
மொத்தத்தின் இன்றைய 3 ப்ரோமோக்களும் ரசிகர்களை அதிகளவில் கவர்ந்து இன்றைய எபிசோட் குறித்த எதிர்ப்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்க செய்துள்ளது.