Bigg Boss Tamil 3: கடந்த ஜூன் 23-ம் தேதி தொடங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து நேற்று வனிதா வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் இன்று வெளியாகியிருக்கும் முதல் ப்ரோமோவில், பிக் பாஸ் இறுதி போட்டிக்குள் நுழைவதற்கான வாய்ப்பளிக்கும், ‘டிக்கெட் ஃபினாலே’விற்கான டாஸ்க்குகள் கொடுக்கப்படுவது தெரிகிறது. “இந்த வாரம் கொடுக்கப்படும் வெவ்வேறு டாஸ்க்குகளில் சிறப்பாக விளையாடுபவருக்கு, இந்த டிக்கெட் ஃபினாலே வழங்கப்படும்” என்று பிக்பாஸ் அறிவிக்கிறார்.
Advertisment
”அவன் கேமை சரியா புடிச்சிட்டான், அது அப்படியே போகட்டும்” என கவினைப் பார்த்து சாண்டி சொல்கிறார். “80 நாளில் புரியாதது இனி எப்படி புரியும்” என கேள்வி எழுப்புகிறார் கவின். ”இதுக்கெல்லாம் நீங்க வருத்தமே படாதீங்க” என சாண்டியிடம் சொல்கிறார் சேரன்.
Advertisment
Advertisements
இரண்டாவது ப்ரோமோவில் லிவிங் ஏரியாவில் ஹவுஸ்மேட்ஸ் அமர்ந்திருக்கிறார்கள். நாமினேஷன் ப்ராசஸ் தொடங்குகிறது. கன்ஃபெஷன் ரூமுக்குள் செல்லும் சேரன், ”என்னைய எப்படியோ ஒருத்தவங்க நாமினேட் பண்ண போறாங்க” அப்படிங்கறப்போ, நான் சாண்டி அண்ட் கவின் ரெண்டு பேரையும் நாமினேட் பண்றேன்” என்கிறார்.
பிறகு வெளியில் வந்ததும், ”சாண்டியும் கவினும் அவங்க 3 பேர் வரணும்ன்னு சொல்லிட்டாங்க. எனக்கு லாஸ்லியாவுக்கும், ஷெரினுக்கும் குத்த விருப்பமில்லை. மிச்சமிருக்குறது 2 பேரு தான். சாண்டியும் கவினும்” என தான் நாமினேட் செய்தது குறித்து முகெனிடம் கூறுகிறார் சேரன்.
வழக்கம் போல் எவிக்ஷனில் சேரன் மற்றும் ஷெரீனை டார்கெட் செய்கிறார் சாண்டி. அதற்கு காரணமாக அவர் கூறும் விளக்கமும் ஏற்கனவே பலமுறை சொன்னது தான். தர்ஷனிடம் இந்த விளக்கத்தை கூறுகிறார் சாண்டி. ஏற்கனவே ஒருமுறை சீக்ரெட் ரூமுக்கு சென்று வந்த சேரனுக்கு மக்கள் ஆதரவு அதிகம் என்பது சாண்டியின் கணிப்பு. எனவே, பலமான போட்டியாளர் என்ற நோக்கி சேரன், ஷெரீனை நாமினேட் செய்ததாக சாண்டி விளக்குகிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சி, இறுதிக் கட்டத்தை நெருங்கும் நிலையில், யார் யார் ஃபைனலுக்கு செல்வார்கள், யாருக்கு ‘பிக் பாஸ் தமிழ் 3’ டைட்டில் கிடைக்கும் என்பதைத் தெரிந்துக் கொள்ள ஆர்வமாக இருக்கிறார்கள் ரசிகர்கள்!