Bigg Boss Tamil 3 – Day 19 promo : பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில், வனிதா விஜயகுமார், கிட்டத்தட்ட எல்லா கன்டெஸ்டண்ட்களுடனும் சண்டை போட்டுவிட்டார். இன்றைய எபிசோடில், வனிதா தர்சனுடன் சண்டை போடுவது போன்று முதல் புரோமோவும், தர்சனை ஷெரீன் சாந்தப்படுத்துவதாக இரண்டாவது புரோமோவும் வெளியாகியுள்ளன.
பிக்பாஸ் தமிழ் 3 நிகழ்ச்சி, வெற்றிகரமாக 19வது நாளை எட்டியுள்ளது.கடந்த சில தினங்களாக கலகலப்பூட்டிய ‘கொடூர கொலைகாரன்’ டாஸ்க் சச்சரவுடன் முடிவு பெற்றிருக்கிறது. காரணம், கொலையாளிகள் யார் என்பதை யார் என ஹவுஸ்மேட்ஸ் கண்டு பிடித்தது தான். ஆம்! வனிதாவும், முகின் ராவும் தான் இந்த கொலைகளை செய்ததாக பிக்பாஸ் அறிவித்தார்.
கவினும் கைதி உடையை அணிந்துக் கொண்டு சிறைக்கு செல்ல தயாரானார். ஆக, சரவணன், சேரன், கவின் ஆகிய 3 பேரில் முதலில் சிறைக்கு செல்வது யார் என்ற பரபரப்புடன் 18ம் நாள் நிகழ்ச்சி முடிவடைந்திருந்தது. சிறப்பாக டாஸ்க் செய்தவர்களாக வானிதா, மோகன் வைத்யா, மற்றும் சாக்ஷி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இதன் மூலம் இவர்கள் மூவரும் அடுத்தவார தலைவர் பதவிக்கு போட்டியிட முடியும் என பிக்பாஸ் அறிவித்திருந்தார்.
அதைவைத்து 19ம் நாள் நிகழ்ச்சி தொடர்கிறது, முதல் புரோமோ வீடியோவில், நீங்க வேணும்னா சாக்ஷிகிட்ட குடுத்துருங்கனு வனிதா சொல்கிறார். அதற்கு தர்சன் கருத்து தெரிவிக்க வனிதா கோபமடைகிறார். பிக்பாஸ கூப்புடு என்று சொல்கிறார். அதற்கு தர்சன் பதிலளிப்பது போன்று முதல் புரோமோ முடிகிறது.
வனிதாவிடம் சண்டை போட்டு மனமுடைந்த தர்சனை, ஷெரீன் சாந்தப்படுத்துவது போன்ற காட்சிகளும், அப்போது யாத்தே யாத்தே பாடல் பின்னணியில் ஒலிப்பது போன்று இரண்டாவது புரோமோ வீடியோ உள்ளது.
லோஸ்லியா தலைமையில் பட்டர்பிளை பாடலை சாண்டி பாட, எல்லோரும் பாடிக்கொண்டே ஆடுகின்றனர். பாடிக்கொண்டே ஓடும் அபிராமியை, முகின் துரத்துகிறார் போன்ற கலகலப்பான காட்சிகளுடன் 3வது புரோமோ உள்ளது.
வனிதா - தர்சன் சண்டை, யாத்தே யாத்தே பாடலின் பின்னணியில் தர்சன் - ஷெரீன் சமாதானம், லோஸ்லியாவின் பட்டர்பிளை டான்ஸ் என இன்று பார்வையாளர்களுக்கு செம விருந்து காத்திருக்கிறது.