Advertisment

ஒருத்தருக்கு கோல்டன் டிக்கெட், இன்னொருத்தருக்கு கனவு கலைய போகுது!

Bigg Boss Tamil 3: என்ன அந்த கேம் உடலால் மோதி விளையாடுவதா, மனதால் மோதி விளையாடுவதா?

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Bigg Boss Tamil 3 Promo

Bigg Boss Tamil 3 Promo

Bigg Boss Promo: விஜய் டி.வி-யில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்த வாரம் முழுவதும் ஃபைனலுக்கு செல்வதற்கான ’டிக்கெட் ஃபினாலே’ டாஸ்க்குகள் நடந்த நிலையில், இந்த டாஸ்க்கில் யார் வெற்றியாளர் என்பது இன்று தெரிய வந்துவிடும்.

Advertisment

இதற்கிடையே சனிக்கிழமைகளில் ஹவுஸ்மேட்ஸை சந்திப்பது கமல் ஹாசனின் வழக்கம். அப்போது கடந்தவாரம் போட்டியாளர்கள் செய்த நன்மை தீமைகளை சுட்டிக் காட்டுவார். அந்த வகையில், இன்றைய முதல் ப்ரோமோ வெலியாகியுள்ளது.

அதில் கறுப்பு சட்டையில் தோன்றும் கமல், “கேம் கேம் என்ற வார்த்தை இந்த நிகழ்ச்சியின் முழுவதும் வியாபித்திருக்கிறது. என்ன அந்த கேம் உடலால் மோதி விளையாடுவதா, மனதால் மோதி விளையாடுவதா? இரண்டும் கலந்தது தான். இதில் மனதால் மோதுபவர்களுக்கு காயம் அதிகம் ஏற்படக்கூடும். இந்த வெற்றிப் பயணத்தை நோக்கிய பயணத்தில் ஒருவருக்கு, கோல்டன் டிக்கெட் கிடைக்கப்போகிறது. இன்னொருவருக்கு கனவு கலைய போகிறது” என்கிறார். டிக்கெட் ஃபினாலேவையும், எவிக்‌ஷனையும் மனதில் வைத்து தான் இங்கு கமல் இப்படி கூறுகிறார் என்பது தெளிவாகிறது.

Kamal Haasan Bigg Boss Tamil Bigg Boss
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment