Bigg Boss Tamil 3: பிக்பாஸ் நிகழ்ச்சியில் வார நாட்களை விட சனி, ஞாயிறு இன்னும் விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் இருக்கும். காரணம் அகம் டிவி வழியே போட்டியாளர்களுடன் உரையாடும் கமல் அவர்கள் செய்த தவறுகள் குறித்து விசாரணை மேற்கொள்வார்.
சமயத்தில் ‘குறும்படங்களும்’ திரையிடப்படும். அதோடு அந்த வாரத்திற்கான எலிமினேஷனையும் அறிவிப்பார். இந்நிலையில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் ’சஸ்பெண்டர்ஸ் பேண்ட்’ மற்றும் சட்டையில் தோன்றுகிறார் கமல். பின்னணியில் ‘ஆத்தாடி அன்ன லட்சுமி’ பாடல் ஒலிபரப்பாகிறது.
“உண்மை முகங்கள காட்ட சொன்னோம். அதுக்குன்னு இப்படியா? காட்டுத் தனமா காட்டு காட்டுன்னு காட்டிட்டீங்க. உள்ள 7 பேர நாமினேட் பண்ணி வச்சிருக்கீங்க. சரி அவங்க தான் அப்படின்னா, நீங்க? 10 கோடி ஓட்டுகள் போட்டு உங்க முகத்த காட்டிருக்கீங்க, ஸாரி உங்க பவர காட்டிருக்கீங்க. உங்க முதல் தீர்ப்பு என்ன? இன்று இரவு 9.30 மணிக்கு” என அந்த ப்ரோமோ முடிவடைகிறது. பிக்பாஸை தனது அரசியல் மேடையாக பயன்படுத்திக் கொள்ளும் கமல், ப்ரோமோவில் போகிற போக்கில் நடந்து முடிந்த தேர்தல் முடிவுகளைக் குறிப்பிட்டிருக்கிறார்.